கடன்: குர்ஆன் கூறுவதென்ன?

உபாதத் துப்னுல் சாமித் (ரலி) நபிகள் நாயகம் அவர்களின் நற்றோழர். அவர்களின் மகன் வலீத், அவரது பிள்ளை உபாதத். 
கடன்: குர்ஆன் கூறுவதென்ன?
கடன்: குர்ஆன் கூறுவதென்ன?

உபாதத் துப்னுல் சாமித் (ரலி) நபிகள் நாயகம் அவர்களின் நற்றோழர். அவர்களின் மகன் வலீத், அவரது பிள்ளை உபாதத். 

தந்தை வலீத்தும், மகன் உபாதத்தும் கலந்து ஆலோசித்து ஒரு முடிவு எடுத்தனர். மதினா வாசிகளான அன்சாரி தோழர்கள் வயது முதிர்ச்சி தளர்ச்சியினால் இறக்கின்றனர். அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கற்ற கல்வி அவர்களோடு மறைந்து விடக்கூடாது என்று எண்ணி, வாழும் கற்றறிந்த அறிஞர்களைச் சந்தித்து அறிவு பெற ஆவல் கொண்டனர். 

அதன்படி, அபுல் யசர் (ரலி) அவர்களை முதலில் சந்தித்தனர். அபுல் யசர் (ரலி) அவர்களின் முகத்தில் கருஞ்சிவப்பாக இருந்ததைக் கண்ட தந்தையும், மகனும், அறிஞர் கோபமாக இருப்பதாக நினைத்து கோபத்தின் காரணத்தை வினவினர். 

அபுல் யசர் (ரலி), தேவையில் துன்புறுவோருக்கு வட்டியின்றி கடன் கொடுத்து உதவுவார். ஒருமுறை தவணைத் தேதி முடிந்ததும், கடன் பெற்றவர் வீட்டிற்கு கடனைத் திருப்பி வாங்கச் சென்றார். 

"அவர் வீட்டில் இல்லை!' என்று பதில் வந்தது. அப்பொழுது கடன் பெற்றவரின் சிறிய குழந்தை வீட்டிற்கு வெளியில் வந்தது. 

"உன் தந்தை எங்கே?' என்று கேட்டதும், கள்ளமில்லா வெள்ளை உள்ளம் கொண்ட குழந்தை, "தந்தை, தாயின் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து இருப்பதாக'க் கூறியது. 

அபுல் யசர் (ரலி) உரத்த குரலில் "நீர் எங்கே இருக்கிறீர் என்பது தெரிந்துவிட்டது. வெளியில் வாருங்கள்!' என்று அழைத்தார்கள். 

கடனாளி பயத்தோடும், நடுக்கத்தோடும் வெளியில் வந்தார். "ஏன் இப்படி செய்கிறீர்கள்?' என்று கேட்டதும், "வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலை; பொய்யான தவணைகளை மீண்டும் மீண்டும் கேட்டு, உங்களை அலைய விடக்கூடாது என்றே ஒளிந்ததாக' மொழிந்தார். கடன் பெற்றவர் கூறிய உண்மையை உணர்ந்த அபுல் யசர் (ரலி), அவரின் கடனைத் தள்ளுபடி செய்தார்கள். 

உள்ளபடியே வாங்கிய கடனை உடனே செலுத்த இயலாதவர்களுக்குத் தவணையை நீட்டிப்பதும், கொடுத்த கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளவர்களுக்குத் தள்ளுபடி செய்வதும் தாஹா நபி (ஸல்) வழி என்று கூறி, "கடன் பெற்றவரின் நிலையை அகத்தில் நினைத்து வருந்தியதால் ஏற்பட்ட கவலையின் தோற்றமே முகத்தில் தோன்றிய கருஞ்சிவப்பு!' என்று பதில் கூறினார். அறிவிப்பவர் உபாதத் இப்னு சாமித் (ரலி) நூல் - முஸ்லிம், பைஹகீ. 

வந்தவர்களின் நோக்கத்தை அறிந்து கடன் கொடுப்பது குறித்து குர்ஆன் கூறுவதையும், கோமான் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகளையும் அறிவித்து, வந்தவர்களின் வந்த நோக்கம் நிறைவேற, குறைவின்றி கற்ற கல்வியைக் கவினுற கற்பித்தார். 

கடன் பெற்றவர் நெருக்கடியில் இருந்தால், அப்பொழுது அவருக்கு வசதி ஏற்படும் வரை தவணை கொடுக்க வேண்டும். நீங்கள் அறிந்தால் "கடனைத் தீர்க்க சக்தியற்றவர்களுக்குத் தருமமாக கொடுத்து விடுவது நன்மை பயக்கும்' என்று நயனுடைய குர்ஆனின் 2 - 280 ஆவது வசனம் நவில்கிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com