புஷ்கர பாகம் - புஷ்கராம்சம் - புஷ்கர நவாம்சம்

14 -ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீ வைத்தியநாத தீட்சிதர் என்பவரால் எழுதப்பட்ட "ஜாதகப் பாரிஜாதம்' என்கிற நூலில் புஷ்கர பாகம், புஷ்கராம்சம், புஷ்கர நவாம்சம் பற்றிக் கூறப்பட்டுள்ளது.


14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீ வைத்தியநாத தீட்சிதர் என்பவரால் எழுதப்பட்ட "ஜாதகப் பாரிஜாதம்' என்கிற நூலில் புஷ்கர பாகம், புஷ்கராம்சம், புஷ்கர நவாம்சம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. 


புஷ்கர பாகம் என்பது பன்னிரண்டு ராசிகளிலும் கிரகங்கள் குறிப்பிட்ட பாகையில் இருப்பதால் உண்டாகிறது. அவைகள் முறையே, மேஷம் (21), ரிஷபம் (14), மிதுனம் (18), கடகம் (8), சிம்மம் (19), கன்னி (9), துலாம் (24), விருச்சிகம் (11), தனுசு (23), மகரம் (14), கும்பம் (19), மீனம் (9) இது புஷ்கர பாகமாகும். 


மேஷ ராசியில் மேற்கூறிய பாகையில் உள்ள கிரகம் நவாம்சத்தில் துலாம் ராசியில் இருக்கும்.  இப்படியே ரிஷப ராசிக்கு ரிஷப நவாம்சம், மிதுன ராசிக்கு மீன நவாம்சம், கடக ராசிக்கு கன்னி நவாம்சம், சிம்ம ராசிக்கு கன்னி நவாம்சம், கன்னி ராசிக்கு மீன நவாம்சம், துலாம் ராசிக்கு ரிஷப நவாம்சம், விருச்சிக ராசிக்கு துலாம் நவாம்சம், மகர ராசிக்கு ரிஷப நவாம்சம், கும்ப ராசிக்கு மீன நவாம்சம், மீன ராசிக்கு கன்னி நவாம்சம் என்று வரும். இவைகள் புஷ்கர பாகத்திற்குரிய புஷ்கராம்சங்களாகும். 

அக்னி ராசிகளான மேஷம், சிம்மம், தனுசு ராசிகளுக்கு 7, 9 -ஆம் அம்சங்களும், பூமி ராசிகளான ரிஷபம், கன்னி, மகர ராசிகளுக்கு 3, 5 -ஆம் அம்சங்களும், காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்ப ராசிகளுக்கு 6, 8 -ஆம் அம்சங்களும், நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீன ராசிகளுக்கு 1, 3 -ஆம் அம்சங்களும் புஷ்கர நவாம்சங்களாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 

புஷ்கர நவாம்சத்திற்கு ஒன்றரை ரூப மதிப்பையும், புஷ்கர பாகத்திற்கு இரண்டு ரூப மதிப்பையும், உச்ச கிரகத்திற்கு ஒரு ரூப மதிப்பையும் குறிப்பிட்டுள்ளார்கள். புஷ்கர நவாம்சத்தில் அந்த கிரகம் நீச்சமானாலும் உச்ச பலனைப் பெறுவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com