பொருளைத் தடுத்தால் அருளும் தடைபடும்!

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: மக்களிடையே ஒரு காலம் வரும்.  அப்போது மனிதன் தான் ஈட்டிய பொருள் ஹலாலானதா அல்லது ஹராமானதா என்பதையெல்லாம் பொருட்படுத்தமாட்டான்.
பொருளைத் தடுத்தால் அருளும் தடைபடும்!


நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: மக்களிடையே ஒரு காலம் வரும்.  அப்போது மனிதன் தான் ஈட்டிய பொருள் ஹலாலானதா அல்லது ஹராமானதா என்பதையெல்லாம் பொருட்படுத்தமாட்டான்.
குடும்ப உறவுகளுக்குள், கொண்டு வரப்படும் சம்பாத்தியம் ஹலாலானதா இல்லையா என்றெல்லாம் இப்போது யாரும் யாரையும் கேட்பதில்லை.  பொருள் கொண்டுவந்தால் சரி என்று நினைக்கிறோம்.  மேற்கண்ட ஹதீஸை மனதில் நினைத்தால், இத்தகைய விசாரிப்புகள் நம்மிடையே ஏற்படும். அதனால், சம்பாத்தியமும் தூய்மையாகும்; நம்முடைய உள்ளமும், வணக்க வழிபாடுகளும் தூய்மையாகும்.
நபி(ஸல்) அவர்கள் பங்குதாரர்களைப் பற்றியும் கூறியுள்ளார்கள்:
கூட்டாகச் சேர்ந்து வியாபாரம் செய்பவர்கள் இந்த ஹதீஸை மனதில் இறுத்திக்கொண்டு செயல்பட்டால் குழப்பமும் வராது; அல்லாஹ்வுடைய உதவியும் கிடைக்கும்.
இறைவன் கூறுகிறான்:
ஒரு வியாபாரத்தின் பங்குதாரர்களாக இருவர் இருக்கின்றனர். எதுவரை ஒருவரையருவர் மோசடி செய்யமாட்டார்களோ அதுவரை நான் அவர்களுடன் இருக்கிறேன்.  ஆனால், ஒரு பங்குதாரர் இன்னொரு பங்குதாரரை மோசடி செய்யும்போது நான் அவ்விருவருக்குமிடையே இருந்து வெளியேறி விடுகிறேன்.  அங்கு சைத்தான் வந்து விடுகிறான்.
மேற்கண்ட ஹதீúஸ குத்ஸியில் அல்லாஹ், பங்குதாரர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறையைக் கூறியுள்ளான்.  எப்போது ஒருவரையொருவர் ஏமாற்றுவார்களோ அப்போதே அல்லாஹ்வின் பொறுப்பிலிருந்து அவர்கள் நீங்குவதோடு சைத்தான் அதில் சேர்ந்து விடுகிறான்.  அதனால் குழப்பங்களும், மனக்கசப்புகளும், நஷ்டங்களும் தோன்ற ஆரம்பிக்கும் என்பது உண்மை.
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
மனிதர்களில் மூன்று வகையினர் உள்ளனர்.  அவர்களிடம் அல்லாஹ் மறுமை நாளில் பேசவும் மாட்டான்; திரும்பிப் பார்க்கவும் மாட்டான்.
முதலாம் வகையினர், வியாபாரப் பொருளை கொள்முதல் செய்யும்போது, நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிக விலை கொடுத்துத் தாம் வாங்கியதாகக் கூறி சத்தியம் செய்பவர்.
இரண்டாம் வகையினர், அஸர் நேரத்திற்குப் பின் சத்தியம் செய்து அதன்மூலம் ஒருவரின் பொருளை எடுத்துக்கொண்டவர்.
மூன்றாம் வகையினர், தம்முடைய தேவைக்கு மேல் அதிகமாக இருந்த தண்ணீரைத் தடுத்து வைத்துக் கொண்டவர்.  அவர் இப்படி செய்வதால் அல்லாஹ் மறுமைநாளில் அவரிடம் இவ்வாறு கூறுவான்: "உம்முடைய தேவைக்கு மேல் இருந்த தண்ணீரை - அது உம்மால் படைக்கப்படாதிருக்க - நீர் தடுத்து வைத்தாய்.  எனவே இன்று நான் வழங்கப்போகும் என்னுடைய அருளையும் உனக்கு தடுத்துக் கொள்வேன்!'

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com