முகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி
நவகிரகங்களை ஏந்திய விநாயகர்!
By -மதுராந்தகம் குமார் | Published On : 31st December 2021 12:00 AM | Last Updated : 31st December 2021 12:00 AM | அ+அ அ- |

நவகிரகங்களை ஏந்திய விநாயகர்!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் படாளம் கூட்டுச்சாலையில் இருந்து 4 கி.மீ. தொலைவில் திருமலைவையாவூர் கிராமத்தில் ஸ்ரீராமாநுஜர் யோக வனம் உள்ளது. இங்கு எழுந்தருளி யுள்ள நவகிரக விநாயகர் சந்நிதி தனிச்சிறப்புடையது. எட்டு அடி உயரமுள்ள ஒரேகல்லில் விநாயகப் பெருமான் திருவுருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரின் திருமேனியில் இடம் பெற்றுள்ள நவகிரகங்கள்:
விநாயகப் பெருமானின் தலைப்பகுதியில் குரு பகவான், நெற்றியில் சூரிய பகவான், வயிற்றுப்பகுதியில் சந்திர பகவான், வலதுமேல் கையில் சனி பகவான், வலது கீழ் கையில் புத பகவான், வலது காலில் செவ்வாய் பகவான், இடதுமேல் கையில் ராகு பகவான், இடது கீழ் கையில் சுக்கிர பகவான், இடதுகாலில் கேது பகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
இந்த நவகிரக விநாயகரை வணங்கினால், அவருள் அடங்கிள்ள நவகிரகங்களின் அருளையும் ஒருங்கே பெறமுடியும்.
மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி அன்று, விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை அணிவித்து வணங்கினால் குழந்தைப் பேறு வேண்டியவர்களுக்கு மழலை பாக்கியம் உண்டாகும். திருமணத்தடை நீங்க வேண்டும், வழக்குகளில் வெற்றிபெற வேண்டும் என எண்ணுபவர்கள் மூன்று வாரம் தொடர்ந்து நவகிரக விநாயகரை வேண்டினால் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை!