மணியோசை (31/12/2021)

திரிகூடராசப்பக் கவிராயரின் ஊர் "மேலகரம்' என்பதையும் அறிந்து மகிழ்ந்தேன்

டாக்டர் சுதா சேஷய்யன் எழுதும் "பொருநை போற்றுதும்!' (174) படித்தேன். குற்றாலத்தின் சிறப்பைக் குற்றாலக்  குறவஞ்சி பாடல் மூலம் நயம்பட எடுத்துக்காட்டியுள்ளார். நாயக்க மன்னர் முத்து விஜய ரங்க சொக்கநாதர் பரிசாக வழங்கியதே "குறவஞ்சி மேடு' என்பதையும், திரிகூடராசப்பக் கவிராயரின் ஊர் "மேலகரம்' என்பதையும் அறிந்து மகிழ்ந்தேன். நன்றி!       
-ரெ. சுப்பாராஜு, கோவில்பட்டி. 

ஜி.ஏ.பிரபா எழுதிய தேவியின் திருத்தலங்கள் கட்டுரையில், மேட்டுப்பாளையம் வன பத்ர காளியம்மன்  திருக்கோயில் பற்றிய வரலாறும், தொரத்தி மரத்தில் கல்லைக் கட்டி வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற செய்தியும்  பயனுள்ளதாக  இருந்தது. நன்றி!
-எஸ்.பானு, சிறுகளத்தூர்.

ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்து எழுதிய புத்தாண்டு பலன்கள் - 2022 படித்து மகிழ்ந்தோம். 26 பேர் கொண்ட எங்கள் கூட்டுக் குடும்பத்தில் 12 ராசிகளுக்கும் உரியவர்கள் தலா 2 பேர் வீதம் இருக்கிறோம். எங்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்த புத்தாண்டு பலன்களைப் படித்து பாதுகாத்து வைக்கிறோம். "2022-இல் பலம் பெற்ற கிரகங்கள்' துணைக் கட்டுரையும் அருமை. ஜோதிடருக்கு எங்கள் பாராட்டுகளும், நன்றிகளும்!
-லேகா விஷ்ணு, ஆவடி.

ஆர்.அனுராதா எழுதிய "சங்கடங்கள் தீர்க்கும் சஞ்சீவிராயர்' கட்டுரை படித்தேன். ராவுத்தநல்லூர் திருத்தலம் குறித்த பல்வேறு தகவல்களை அறிந்து மகிழ்ந்தேன். பாராட்டுகள்!
-எஸ்.வஜ்ரவடிவேல், கோவை.

எஸ்.வெங்கட்ராமன் எழுதிய "திருப்பாவையைப் பரப்பியவர்' கட்டுரை படித்தேன்.  மஹா பெரியவரின் அருளாசியுடன், இதுவரை அறியாத பல்வேறு ஆன்மிகத் தகவல்கள் கிடைக்கப்பெற்று மகிழ்வுற்றேன்! நன்றி!      
-பி.ரவி, சிதம்பரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com