அன்று அங்கு..! இன்று இங்கு..!!

தேவகிக்கும், வசுதேவருக்கும் பரமானந்தத்தை அளித்த குழந்தையாக அவதரித்த ஸ்ரீகண்ணன்,
அன்று அங்கு..! இன்று இங்கு..!!

ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம்: தேவகிக்கும், வசுதேவருக்கும் பரமானந்தத்தை அளித்த குழந்தையாக அவதரித்த ஸ்ரீகண்ணன், ஆயர்பாடியில் ஆயர்குல மடந்தையான யசோதையின் மடியில் வளர்ந்து, பேரழகு பாலகனாய் ஆயர்
குலச் சிறுவர்களில் ஒருவனாக ஓடியாடி யமுனைக் கரையில் புரிந்த லீலைகளையெல்லாம் லீலா சுகர் என்னும் மகான் தனது "ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம்' என்னும் காவியத்தில் பாடிப் பரவசம் அடைந்துள்ளார். 

ஸ்ரீபாலகிருஷ்ணனின் திருமேனி அழகை அணு அணுவாக மானசீகமாக அனுபவித்து இக்காவியத்தை அருளியுள்ளார். பரம பாகவதோத்தமர்களான ஸ்ரீசூர்தாஸ், ஸ்ரீபுரந்தரதாஸர், ஸ்ரீபக்த நாம்தேவ், ஸ்ரீதுக்காராம் மகராஜ், ஸ்ரீகபீர்தாசர், ஸ்ரீமீராபாய், ஸ்ரீநாராயண தீர்த்தர் ஆகியோர் தங்கள் பக்திப் பாடல்களிலும் பாலகிருஷ்ணனின் லீலைகளைப் பாடி பாடி மகிழ்ந்துள்ளனர். குழந்தை ஸ்ரீகண்ணனின் தெய்வீக விளையாட்டுகளை ஆயர்பாடியிலும், பிருந்தாவனத்திலும், கோகுலத்திலும் ஸ்ரீபரமேஸ்வரன்}நாரதமகரிஷி-
இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் ஒளிந்திருந்து தரிசித்து பரமானந்தம் அடைந்த வைபவங்களை "ஸ்ரீமத் பாகவதம்' விவரிக்கிறது. 

பிருந்தாவனத்தில்..!: பிருந்தாவன திவ்ய úக்ஷத்திரத்தில் ஸ்ரீகண்ணன் குழந்தையாக ஆயர்பாடிச் சிறுவர்களுடன் விளையாடிய புண்ணிய மண்ணில், தினமும் சப்தரிஷிகளும் அதிகாலையில் எழுந்தருளி, பரம பவித்ரமான யமுனை தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீகண்ணன் திருவடி ஸ்பரிசம் பெற்ற மண்ணைத் தங்கள் சிரசில் சேர்த்துக்கொண்டு, சப்தரிஷி மண்டலத்திற்குத் திரும்பிச் செல்வதாக "ஸ்ரீவ்ரஜபூமி மகாத்மியம்' என்னும் நூல் விவரித்துள்ளது. 

"கண்ணனின் அழகைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காண விரும்புவதில்லை' என்று கண்ணனின் திருமேனி அழகை வர்ணித்து பரமானந்தம் அடைந்துள்ளனர் ஆழ்வார்களும்!

தொட்டமளூர்: தேவகி பெற்ற பேரழகுப் பிள்ளை ஸ்ரீகண்ணன், கர்நாடக மாநிலம் மாண்டியா அருகில் உள்ள தொட்டமளூர் úக்ஷத்திரத்தில் தவழும் குழந்தையாக அருள் பாலிக்கிறார். ஸ்ரீபுரந்தரதாஸருக்காக ஸ்ரீகண்ணன் எழுந்தருளிய தலம் இது. 

தீர்ந்தது தமிழகத்தின் குறை: தரிசனம் செய்வோர்க்கு பிறவிப் பயனளிக்கும் இத்தகைய திருக்கோயில் ஒன்று தமிழ்நாட்டில் இல்லையே என்ற ஏக்கம் எனக்கு இருந்து வந்தது. இதே நினைவில் எனது ஆராதனை தெய்வமான ஸ்ரீலட்சுமி நரசிம்மரையும் பிரார்த்தித்து வந்தேன். தெய்வம் திருவுள்ளம் கொண்டு என் தவிப்பை நீக்கியது. சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு (2008 டிசம்பர்-5) ஈரோடு மாவட்டத்தில் உள்ள சில திருக்கோயில்களுக்குச் சென்றிருந்தேன். அப்பொழுது அந்தியூரில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் வெள்ளையம்பாளையம் என்ற சிற்றூரில் புராதனமான ஸ்ரீகிருஷ்ணன் திருக்கோயில் ஒன்று அடியோடு சிதிலமடைந்து இருப்பதாகவும், அவ்வூர் மக்கள் அதனைப் புனர்நிர்மாணம் செய்வதற்கு வசதி இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் பக்தர்கள் கூறினர். 

அத்திருக்கோயிலை வந்து பார்வையிடும்படி என்னை அழைத்துச் சென்றனர். 
ஊர்மக்களின் தூய பக்தி: ஒரு காலத்தில் அந்த பகுதிக்கு ஒளி விளக்காகத் திகழ்ந்த அத்திருக்கோயிலின் நிலையைக் கண்டு கண் கலங்கி நின்றேன். இத்தலத்தின் புராணப் பெயர் "மதுராபுரி'. கோயில் அடியோடு சிதிலம் அடைந்திருந்தாலும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமியர்கள் உள்பட அனைவரும் தங்கள் உயிரினும் மேலாக இடிபாடுகளிடையே கோயிலைப் பாதுகாத்து தினமும் ஸ்ரீகிருஷ்ணரை பூஜித்து, பகவான் நாமம் பாடி வருவதைக் கண்டு பிரமித்தேன். அவ்வூரைச் சேர்ந்த சி.பெரியசாமி என்பவர் ஒவ்வொரு வீட்டிலும் வாரம் ஒரு ரூபாய் வசூலித்து, சுவாமி விக்கிரகம், படங்கள் ஆகியவற்றிற்கு புஷ்பமிட்டு, தீபமேற்றி, நைவேத்தியம் செய்து வருகிறார் என்பதை அறிந்து கொண்டேன். 

திருப்பணி:

சென்னை திரும்பியதும் வெள்ளையம்பாளையம் நினைவாகவே இருந்தது எனக்கு. என் மன வேதனையைக் கண்ட எனது ஆருயிர் நண்பர் சென்னையைச் சேர்ந்த பாஸ்கர் (நிறுவனர்-பி.எல்.பி. ரியல் எஸ்டேட்), "அப்பா! கவலைப்படாதீர்கள். அக்கோயிலை நான் புனர்நிர்மாணம் செய்து கொடுக்கிறேன்'' என்று கூறி அதன்படியே செய்தார். 

மேலும் திருப்பணியில் பங்கேற்ற பவானியைச் சேர்ந்த தொழிலதிபர் செல்வம்}சுமதி தம்பதி, ஈரோடு விமலா}ஐயப்பன் தம்பதியர், திருவண்ணாமலை வி.டி.மகேந்திரன், வேதவாக்கு இணை ஆசிரியர் ஏ.எம்.ஆர்.நரசிம்மன் மற்றும் ஸ்ரீமாயன் பெருமாள் நற்பணி அறக்கட்டளை நிர்வாகிகள் போன்றோர் விவரிக்க இயலாத அளவுக்கு உதவிகள் செய்தனர். 

கும்பாபிஷேகம்: இத்திருக்கோயில் மஹா கும்பாபிஷேக வைபவம் வரும் 25}ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது. பூர்வாங்க பூஜைகள் 23}ஆம் தேதி (சனிக்கிழமை) ஆரம்பமாகும். யாக வேள்வியை தலைமையேற்று நடத்துபவர் சர்வசாதகம் இஞ்சிமேடு  ஸ்ரீ உ.வே.பாலாஜி சுவாமிகள், ஆலய நிர்மாண ஸ்தபதி திருக்கடையூர் ஸ்ரீ சாய்குமார்.

பக்த பெருமக்கள் அனைவரும் திரளாக வந்திருந்து இவ்வைபவத்தில் பங்கேற்று மகத்தான புண்ணியப் பலனைப் பெற்று மகிழுமாறு பிரார்த்திக்கப்படுகிறார்கள். 

மேலும் விவரங்களுக்கு: 9095810944 / 9344754654. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com