அதியமான் கோட்டையில் காலபைரவர்

தருமபுரி நகரில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது தட்சிண காசி எனப்படும் கால பைரவர் கோயில்.  தருமபுரி பேருந்து நிலையத்தில் இருந்து 10 நிமிடத்துக்கு
அதியமான் கோட்டையில் காலபைரவர்


தருமபுரி நகரில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது தட்சிண காசி எனப்படும் கால பைரவர் கோயில்.  தருமபுரி பேருந்து நிலையத்தில் இருந்து 10 நிமிடத்துக்கு ஒரு பேருந்து வீதம் அதியமான் கோட்டைக்குச் செல்கிறது. பேருந்து நிறுத்தத்துக்கு அருகிலேயே கோயில் அமைந்திருக்கிறது.
இக்கோயில் 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. தகடூரை ஆண்ட அதியமான் போருக்குச் செல்லும்முன், இங்குதான் தனது வீர வாளை வைத்து வணங்கிச் செல்வாராம். அதன் பின்னர், அவருக்கு வெற்றிக் கோட்டையாகி விட்டது அதியமான் கோட்டையில் அவரது குலதெய்வமானார் காலபைரவர். 
இங்கே நவ கிரகங்கள் கோயிலின் மஹா மண்டபத்தின் மேற்கூரையில் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் வழியாக சூரிய ஒளி வரும்போது நவ கிரக தோஷங்கள் நீங்குமாம். அதே போல உன்மந்திர பைரவர் திருமேனியில் பன்னிரண்டு ராசிகளும் 27 நட்சத்திரங்களும் அடக்கம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால பூஜை; மாதம்தோறும் வரும் தேய்பிறை அஷ்டமிகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது. 
மாதம் ஒருமுறை தேய்பிறை அஷ்டமி நள்ளிரவில் 1,008 கிலோ மிளகாய் மற்றும் 108 கிலோ மிளகு கொண்டு சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெறுகிறது. இப்பூஜையில் மிளகாயை ஹோமத்தில் போடும்போது சிறிதும் நெடி வருவதில்லை.
இவரைக் கும்பிட கால நேரம் கிடையாது. 24 மணி நேரமும் பூஜைகள் உண்டு. படைத்தல், காத்தல், அழித்தல் என மும்மூர்த்திகளுக்கும் துணையாய் இருப்பவர் இவரே. இக்கோயிலில் நந்தி, நாய் இரண்டும் இருக்கும்; மற்ற கோயிலில் நாய் வாகனம் மட்டும் இருக்கும்.
ராகு காலத்தில் ராஜ அலங்காரத்தில் கால பைரவர் காட்சியளிப்பார். வார அபிஷேகம் உண்டு.
அதிருத்ர யாகம், அஷ்ட பைரவ யாகம், சோலச கணபதி யாகம், சோட லக்ஷ்மி யாகம் இவையனைத்தும் காலை 6 மணி முதல் 9 மணி வரை நடக்கும்.
நினைத்த காரியம் நிறைவேற இந்தக் கோயிலில் பூசணிப் பிஞ்சில் தீபம் ஏற்றினால் நிறைவேறும் என்பது ஐதீகம். அமாவாசையன்று கண் திருஷ்டி, ஓமல் விலக பூசணிக்காய் உடைப்பார்கள்.
பணப் பிரச்னைகள் தீர பெளர்ணமிக்கு சொர்ண கிருஷ்ண குபேர பூஜைகள் நடத்தப்படுகின்றன.
தொடர்புக்கு: 04342-244123

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com