பொன்மொழிகள்!

நல்லவர்களின் நட்பை நாட வேண்டும். தீயவர்களின் நட்பை நாடக் கூடாது. பாம்பு எதுவாக இருந்தால் என்ன? விஷம் ஒன்றுதான்! அது போன்று தீயவர்களின் நட்பை தவிர்க்க வேண்டும். 
பொன்மொழிகள்!


நல்லவர்களின் நட்பை நாட வேண்டும். தீயவர்களின் நட்பை நாடக் கூடாது. பாம்பு எதுவாக இருந்தால் என்ன? விஷம் ஒன்றுதான்! அது போன்று தீயவர்களின் நட்பை தவிர்க்க வேண்டும். உள்ளத்தில் தூய்மை இல்லாதவர்களின் நட்பு விஷமாகும்.    
-பசவண்ணர் 

கற்றுணர்ந்தவர்களுக்குக் கல்வியறிவே அணிகலனாகும்; அவர்களுக்கு மற்றோர் அணிகலன் தேவையில்லை.
-குமரகுருபரர்

இந்த உலகத்தில் தானத்தைப் போன்ற செல்வம் வேறு இல்லை; திருப்தியைப் போன்ற சுகம் வேறு இல்லை; ஒழுக்கத்தைப் போன்ற ஆபரணம் வேறு இல்லை; ஆரோக்கியத்தைப் போன்ற லாபம் வேறு இல்லை.
-பஞ்சதந்திரம் 

ஸ்ரீ ராமா! தேவாதி தேவனே! எப்பொழுதும் பாவச் செயல்களையே செய்துகொண்டு காலம் கழித்துக்கொண்டிருக்கும் இந்தக் கெட்டபுத்தி உள்ளவனை, உன்னைத் தவிர வேறு எந்த ராஜகுமாரன் வந்து காப்பாற்றப் போகிறான்?
-மகான் தியாகராஜர்

தீய சிந்தையுடையவனும் ஹரியை நினைப்பானாகில், அவனது பாவங்களை ஹரி போக்குகிறார். தன் விருப்பமின்றி அக்கினியைத் தீண்டினாலும், அது தொட்டவனைச் சுடத்தானே செய்கிறது?
-ஸ்ரீமத் பாகவதம் 2.6.19

இறைவா! நாங்கள் இறப்புடைய மனிதர்கள். நாங்கள் இறப்பு அறியாத இறைவனான உங்கள் பெயரைக் கூறுகிறோம். உங்களுடைய திருநாமங்களையே திரும்பத் திரும்பக் கூறுகிறோம்.
-ரிக் வேதம் 8.11.5

ஒரு நாள் பழகினாலும், மேன்மக்களாகிய பெரியோர்களின் நட்பு பெரிய பூமி பிளக்கும்படி வேரூன்றி நிற்கும்.
-நறுந்தொகை 34

விதி வலிமை வாய்ந்தது. முற்பிறவியில் செய்த தவறுகளின் விளைவுகளை இந்தப் பிறவியில் நாம் எதிர்கொண்டாக வேண்டும்.
-வியாத கீதை

இறைவனுக்குச் செய்யப்படும் பணி எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும், அது மகத்தான பெருமைக்குரியது. 
-ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்

 இந்த மனித உடல் ஒரு வீடு போன்றது. இது பாவம் என்ற மழையால் தன்னுடைய பலம் அனைத்தையும் இழந்து விழுந்துவிடும் நிலையில் இருக்கிறது. இந்தச் சமயத்தில் உலகப்பற்றால் (விஷயங்களால்) உண்டாகும் சிற்றின்பமாகிய சேற்றைப் பூசுவதால், இதை நிலை நிறுத்திக்கொள்ள முடியுமா?
-ப்ரபோத சுதாகரம்

பாவங்களை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்வதற்குத் தயங்கக் கூடாது. செய்த பாவத்தை ஒப்புக்கொள்வதில் போலிக் கெளரவமோ, பிடிவாதமோ ஏன் இருக்க வேண்டும்?
-சமண மதம்

அண்டியவர்களை ஆதரிக்க வேண்டும். மனிதர்களுக்கு இதமானதும் உண்மையானதையுமே பேச வேண்டும். யாசிப்பவர்களுக்கு வேண்டியதைத் தானம் செய்ய வேண்டும். நல்லவர்களின் சத்சங்கத்தை நாடுங்கள்.
-வாதிராஜரின் ஹிதோபதேசம், 4

ஸ்ரீ ராமராகிய நான் எல்லா உயிர்களுக்கும் பிராணனாக விளங்குகிறேன். என்னிடமே உன் மனம் நிலைத்திருக்கட்டும்.
-ஸ்ரீ ராமபிரான் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com