அரிய விநாயகர் ஆலயங்கள்

மயிலாடுதுறை - திருவாரூர் இடையே பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது "திலதர்ப்பணபுரி'. இங்குள்ள ஆதிவிநாயகர் தும்பிக்கை இல்லாமல் காட்சியளிக்கிறார்!
அரிய விநாயகர் ஆலயங்கள்

மயிலாடுதுறை - திருவாரூர் இடையே பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது "திலதர்ப்பணபுரி'. இங்குள்ள ஆதிவிநாயகர் தும்பிக்கை இல்லாமல் 
காட்சியளிக்கிறார்!

மருதமலையில் ஆலமரம் முதலான ஐந்து விருட்சங்கள் பின்னிப் பிணைந்திருக்கும் இடத்தருகில் அருள் பாலிக்கிறார் பஞ்சவிருட்ச கணபதி. பஞ்ச விருட்சத்தின் அடியில், முனிவர்கள் அருவமாகத் தவம் செய்வதாக 
ஐதீகம்!

தாமரை மலரில் அமர்ந்த நிலையில், வழக்கத்துக்கு மாறாக கையில் கரும்புடன் காட்சி தருகிறார் திருப்பரங்குன்றம் கற்பக விநாயகர்.

சென்னை - மீஞ்சூருக்கு அருகில் உள்ளது செட்டிப்பாளையம். இங்குள்ள விநாயகர் கோயிலில், வலப்புறம் சாய்ந்த நிலையில் அருளும் பிள்ளையாரை தரிசிக்கலாம். இவரை "வலஞ்சை விநாயகர்' என்றழைக்கின்றனர்.

அரியலூர் - ஜெயங்கொண்டம் மார்க்கத்தில் சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ள வைரவனீஸ்வரர் ஆலயத்தில், அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரப் பயிற்சியளித்த வில்லேந்திய விநாயகரை தரிசிக்கலாம்.

ஐங்கரனான விநாயகர், மூன்று கரத்தோனாக எழுந்தருளும் தலம் பிள்ளையார்பட்டி. இங்கே, விநாயகருக்கு வெள்ளை ஆடை மட்டுமே அணிவிக்கின்றனர். 

திருவையாறு கோயிலில் அருள்கிறார் ஓலமிட்ட விநாயகர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதை உணர்த்த நள்ளிரவில் ஓலமிட்டு, ஊர்மக்களைக் காப்பாற்றியதால் இவருக்கு இந்தத் திருநாமம் ஏற்பட்டது! இதே தலத்தில் லிங்கத்தின் ஆவுடையார் மீது அமர்ந்தருளும் ஆவுடைப்பிள்ளையாரையும் தரிசிக்கலாம். 

மதுரையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் திருபுவனம் கோட்டை எனும் இடத்தில் "விநாயக கோரக்கர்' அருள்கிறார். நோய்களைத் தீர்ப்பதிலும், சனி தோஷம் தீர்ப்பதிலும் விநாயகர் வடிவில் உள்ள கோரக்க சித்தர் அருள்கிறார்.

நாகப்பட்டினம் செண்பகபுரியில் உள்ளது ஆதிகும்பேஸ்வர சுயம்பு விநாயகர் ஆலயம். இவர் சந்நிதி கோஷ்டங்களில் மும்மூர்த்திகளும் அருள்வது வித்தியாசமான அமைப்பு.

தூத்துக்குடி, ஆறுமுக மங்கலத்தில் ஆயிரெத்தெண் விநாயகர் அருள்கிறார். இத்தலத்தில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் பஞ்ச
முக ஹேரம்ப கணபதி, நடராஜப்பெருமானுடன் திருவீதிவுலா வருகிறார்.

கோயம்புத்தூர் மத்தம்பாளையத்தில் காரண விநாயகரை தரிசிக்கலாம். இக்கோயிலில் விநாயகர் அருகில் நந்தியம்பெருமான் வீற்றிருப்பது தனிச் சிறப்பு.

சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள திருநாரையூரில் அருள்கிறார் பொள்ளாப் பிள்ளையார். பன்னிரு திருமுறைகளைத் தொகுக்க உதவிய நம்பியாண்டார் நம்பிக்கு அருள்புரிந்த விநாயகர் இவர். உளியால் செதுக்கப்படாத (பொள்ளா) பிள்ளையார்.

தஞ்சாவூர், கணபதி அக்ரஹாரத்தில் மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவதில்லை. விநாயகர் கோயிலிலேயே வந்து கொண்டாடுகின்றனர்.

கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகேயுள்ள மருத்துவக் குடியில் தேள் போன்ற வடிவமைப்பில் "விருச்சிகப் பிள்ளையார்' அருள்கிறார்.

திருச்சிக்கு அருகேயுள்ள பிச்சாண்டவர் கோயிலில் சிம்ம வாகனத்தின் மீது பஞ்சமுக விநாயகர் ஐந்தடி உயரத்தில் அருள் புரிகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com