காலச் சக்கர தசை- ஒரு விளக்கம்!

நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட ஆண்டு மிகவும் சிறப்புக்குரியதாக  அமைகிறது.

நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட ஆண்டு மிகவும் சிறப்புக்குரியதாக  அமைகிறது. அந்தக் குறிப்பிட்ட ஓர் ஆண்டில், ஒவ்வொருவரின் வயதுக்கேற்ப,  அந்தக் கிரகத்தால் நற்பலன்கள் உண்டாகத் தொடங்குகிறது. இதற்கு "காலச் சக்கர சுழற்சி' என்று பெயர்!  

ஜாதகரின் வயதுக்கேற்ப ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய விசேடமான ஆண்டுகள் வருமாறு:

சூரியன் பகவான் 22 வயது,  சந்திரன் பகவான் 24 வயது, செவ்வாய் பகவான் 28 வயது, குரு பகவான் 16 வயது, புத பகவான் 32 வயது, சுக்கிர பகவான் 25 வயது , சனி பகவான் 35 வயது, ராகு பகவான் 42 வயது, கேது பகவான் 48 வயது.

மேலே சொல்லப்பட்டவை அனைத்தும் அந்த கிரகத்தின் மூலம் நற்பலன்கள் உண்டாவதற்கான ஆரம்பக் காலம் ஆகும்.

உதாரணமாக, பலமுள்ள சூரிய பகவான் ஒன்பதாம் வீட்டில் இருந்தாலும், ஒன்பதாம் வீட்டுக்கு உரியவராக இருந்தாலும், அவர் மூலம் ஜாதகருக்கு 21 வயது முடிந்து 22 வயது துவங்கும்போது அதிர்ஷ்டக் காலம் ஆரம்பமாகும். அப்படியே மற்ற கிரகங்களுக்கும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஜாதக தசை யோகம் உள்ளதாக நடைபெறும்போது, காலச் சக்கர தசை அசுப பலன் உள்ளதாக நடைபெற்றால் "யோக பங்கம்' ஆகும்.  ஜாதக தசை அசுபம் ஆக நடைபெறும்போது, காலச் சக்கர தசை யோகம் உள்ளதாக நடைபெற்றால், "அசுப தசையின் பலன் பங்கமாகி நன்மை உண்டாகும்'.  

ஜாதக தசை,  காலச் சக்கர தசை  இரண்டும் சுபமாக இருக்கும் பொழுது ராஜயோகத்தைக் கொடுக்கும் . ஜாதக தசை, காலச் சக்கர தசை இரண்டும் அசுபமாக நடைபெறும் போது மிகவும் கெடுபலனையே தரும்.  பொதுவாக, காலச் சக்கர கிரகத்தினால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாவது அனுபவ உண்மை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com