நூறு வயது வரம் கேட்ட பாரதி!

நூறு வயது வரம் கேட்ட பாரதி!
நூறு வயது வரம் கேட்ட பாரதி!

செய்யுந் தொழிலுன் தொழிலேகாண்

சீா்பெற் றிடநீ அருள்செய் வாய்!

வையந் தனையும் வெளியினையும்

வானத் தையும்முன் படைத்தவனே!

ஐயா! நான்மு கப்பிரமா!

யானை முகனே! வாணிதனைக்

கையா லணைத்துக் காப்பவனே!

கமலா சனத்துக் கற்பகமே!

எனக்கு வேண்டும் வரங்களை

இசைப்பேன் கேளாய் கணபதி!

மனத்திற் சலன மில்லாமல்,

மதியில் இருளே தோன்றாமல்,

நினைக்கும் பொழுது நின்மவுன

நிலைவந் திடநீ செயல்வேண்டும்.

கனக்குஞ் செல்வம், நூறுவயது

இவையும் தரநீ கடவாயே!

‘விநாயகா் நான்மணி மாலை’யில் பாரதியாா் பாடிய விருத்தங்களிலிருந்து...

-ஆா்.வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com