மழபாடிவந்தால் மணப்பேறு வாய்க்கும்!

பங்குனியில் உத்திரத்தில் பல தெய்வீகத் திருமணங்கள் நடந்திருப்பதை புராணங்கள் தெரிவிக்கின்றன.
மழபாடிவந்தால் மணப்பேறு வாய்க்கும்!

பங்குனியில் உத்திரத்தில் பல தெய்வீகத் திருமணங்கள் நடந்திருப்பதை புராணங்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில் ஆலயங்களிலும் அந்த ஐதீக விழாவினை நடத்தி இன்புறுகின்றோம். இதே பங்குனியில் புனர்வசு (புனர்பூசம்)வில் நடந்த மற்றொரு தெய்வீக திருக்கல்யாணம் நந்திகேஸ்வரர் கல்யாணம்.

திருவையாறு திருத்தலத்தில் அந்தணர்புரம் (அந்தணர் குறிச்சி) என்னும் பகுதியில் வசித்து வந்த  சிலாத முனிவர் ஐயாறப்பன் ஆணைப்படி புத்திரப்பேறு வேண்டி புத்திரகாமேட்டி யாகம்  செய்து  பின் யாக பூமியை உழுகையில்  பெட்டகம் ஒன்று  கண்டெடுக்கப்பட்டது.  அதில் இருந்தவர்தான் செப்பேசன். 

இவர்தான்,  தன் ஆயுள்  நீடிக்கவேண்டி கடுந்தவம் செய்து ஐயாறப்பனின் உபதேசம் பெற்று கயிலையில்  சிவகணங்களுக்குத்  தலைவராகவும்,  முதல்திருவாயில் இருந்து காக்கும் உரிமையையும், சைவசாரியார்களுள் முதல் குருவாகவும், சிவசாரூபமமும்  பெற்று திகழும்  நந்தியம்பெருமான் ஆவார். 

இவருக்குத்தான் சிலாத முனிவர்  வியாக்ரபாத முனிவரின்  புத்திரியாகிய சுயசாம்பிகையை விவாகம்  செய்வித்தார்.  அந்த திருமணம் நடந்த இடம்  திருமழபாடி. திரு நந்தியெம்பெருமான் திருக்கல்யாண விழா சம்மந்தப்பட்டது. திருவையாறு மற்றும் திருமழபாடி எனும்  இரண்டு தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள். அவ்வாலயத்தில் இவ்வாண்டு நடைபெறும் நிகழ்வுகள்.
திருவையாறு: ஏப்ரல் 8 வெள்ளிக் கிழமை (காலை): அந்தணர்குறிச்சியில் திருநந்தியெம்பெருமான் திருஅவதாரம் (யாகம் நடந்த இடத்தில் ஏர் உழுதல்) (இரவு) 
நந்தியெம் பெருமானுக்கு பட்டம் சூட்டுதல்,  திருவீதி உலா.

திருமழபாடி: ஏப்ரல் 9 } சனிக்கிழமை இரவு 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் புனர்பூசம் நட்சத்திரத்தில் திருமழபாடி பெரியதிருக்கோயிலுக்கு அருகில், கொள்ளிடம் ஆற்றங்கரை ஓரம், திருமழபாடி அருள்மிகு சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி அலங்கார உற்சவர்கள் முன்பும் (பெண் வீட்டார்), திருவையாறு அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர். 

அலங்கார உற்சவர்கள் முன்பும் (பிள்ளை வீட்டார்) திரு.நந்தியெம் பெருமான் சுயஸôம்பிகை தேவி திருக்கல்யாண வைபவம் கூடியிருக்கும் பக்தர்களின் விண்ணைப் பழிக்கும் பரவச கோஷத்துடன் நடைபெறுகின்றது. பின்பு புதுமணத் தம்பதிகள் அலங்காரத்தோடு நெய்த்தானம், கடுவெளி, மழபாடி, பெரும்புலியூர், ஐயாறு என்னும் பஞ்சபூதத் தலங்கள் வலமாக ஐயாறப்பன் ஆலயம் வந்து சேருவர்.

இந்த விழாவில் தருமை ஆதீன குருமகா சந்நிதானம், பல்வேறு மடாதிபதிகள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வர். நந்திதேவர், சுயம்பிரபை தேவி திருமணத்தைக் கண்டு களிக்க, திருமணம் ஆகாத ஆண், பெண் இருபாலருக்கும் விரைவில் திருமணம் நிகழும். என்பது ஐதீகம். இறைக்குறித்தே நந்திக்கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம்' என்ற பழமொழி ஏற்பட்டது. 

மேலும் தகவல்கள் தொடர்பிற்கு: ஸ்ரீ பஞ்ச நதீஸ்வர சுவாமி தேவஸ்தானம், திருவையாறு, தஞ்சை மாவட்டம்,  04362 } 260332. அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில்'  திருமழபாடி (அரியலூர் மாவட்டம்) } 04329- 243282

எஸ்.வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com