ராகு-கேது பகவான்கள்

நவக்கிரக ஸ்தோத்திரம்: சூரிய பகவான் முதலிய  ஒன்பது கிரகங்களின் பரிபூரண அனுக்கிரகத்தை இந்த ஒரு ஸ்லோகத்தை படிப்பதால் அடையலாம்.
ராகு-கேது பகவான்கள்

நவக்கிரக ஸ்தோத்திரம்: சூரிய பகவான் முதலிய  ஒன்பது கிரகங்களின் பரிபூரண அனுக்கிரகத்தை இந்த ஒரு ஸ்லோகத்தை படிப்பதால் அடையலாம். ஒன்பது கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகம் கெட்ட இடத்தில் இருந்தாலும், அந்த கிரகங்களின் தசாபுக்திகள் நேர்ந்தாலும், இந்த ஸ்லோகத்தை ஒன்பது தடவை படித்து ஒவ்வொரு தடவையும் நமஸ்கரிப்பது நலம் செய்யும்.

"ஆரோக்கியம் ப்ராதுநோ தினகரஹா, சந்தேரா யசோ நிர்மலம், பூதிம் பூமி சுதஹா, ஸýதாம் ஸýதயஹா, ப்ரஜ்ஞாம் குரும் கெüரவம், கான்யஹா கோமள வாக் விலாஸ மதுலம், மந்தோ முதம் ஸர்வதா, ராஹர்  பாபஹு பலம், விரோத சமனம், கேதுஹு குலஸ்யோன்னதிம்".

ஆரோக்கியத்தை சூரிய பகவானும், சுத்தமான கீர்த்தியை சந்திரபகவானும், ஐஸ்வர்யத்தை அங்காரக பகவானும், நல்ல புத்தியை புத பகவானும், நல்ல மதிப்பை பிரகஸ்பதி பகவானும், இணையற்றதும்  அழகியதுமான பேசும் திறமையை சுக்கிர பகவானும், எப்பொழுதும் சந்தோஷத்தை சனீஸ்வர பகவானும், புஜ பலத்தையும், சத்ரு நிக்ரஹத்தையும் ராகு பகவானும், குலத்தின் அபிவிருத்தியை கேது பகவானும் நம் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும். ராகு பகவான் அயன சயன மோட்ச ஸ்தானமான பன்னிரெண்டாம் வீட்டில் சூரிய பகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். 

கேது பகவான் ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். நவக்கிரகங்களில் நிழல் கிரகங்கள் என வர்ணிக்கப்படுபவர்கள் ராகு / கேது பகவான்களாவார்கள். மற்ற கிரகங்களின் சுழற்சி முறைக்கு எதிர் வரிசையில் சஞ்சரிப்பார்கள். இதில் ராகு பகவான் போக யோக காரகர் என்றும், கேது பகவான் ஞான மோட்ச காரகர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். சர்பக் கிரகங்களான ராகு / கேது பகவான்களில் ஒருவர் 3, 6, 11}ஆம் வீடுகளில் சஞ்சரிப்பது சிறப்பு. 

இது ஜெனன ஜாதகத்திலோ அல்லது கோசாரத்திலோ அமையும் காலங்களில் பொதுவாக சுப பலன்கள் நடக்கும் என்று உள்ளது.  ராகு / கேது பகவான்கள் தங்களுடன் சேரும் கிரகங்களின் பலத்தை தனதாக்கிக் கொண்டு செயல்படுவார்கள். பார்வையால் அல்ல. ராகு பகவான் தன்னுடன் சேர்ந்த கிரகங்களின் தன்மையை எடுத்துக் கொண்டு பலன் தருவார் என்றால், கேது பகவான் தன்னுடன் இணைந்திருக்கும் கிரகங்களின் தன்மையை கூட்டிக் கொடுத்து அவர்களை பலனளிக்கச் செய்வார். அதனால் ராகு பகவானை பற்றுடையவர் என்றும் கேது பகவானை பற்றில்லாதவர் என்றும் கூறுகிறோம். ராகு / கேது பகவான்கள் அமர்ந்திருக்கும் ராசிகளுக்கு அதிபதிகள் கேந்திர / திரிகோண ராசிகளில் ஆட்சி, உச்சம், மூல திரிகோணம் பெற்றிருந்தால் ராகு / கேது பகவான்களின் தசை / புத்தி / அந்தரங்களில் சிறப்பான நன்மைகள் ஏற்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com