பொன்மொழிகள்!

ஒரு தந்தை கொடைவள்ளலாக விளங்கினால், அவனது புண்ணியத்தில் குறிப்பிட்ட ஒரு பங்கு அவனுடைய மகனையும் சென்று சேரும்.
பொன்மொழிகள்!

ஒரு தந்தை கொடைவள்ளலாக விளங்கினால், அவனது புண்ணியத்தில் குறிப்பிட்ட ஒரு பங்கு அவனுடைய மகனையும் சென்று சேரும். ஆனால் அதே தந்தை அறநெறிக்கு மாறான காரியம் ஏதாவது செய்திருந்தால், அந்தப் பாவம் முழுவதும் செய்தவனையே சேருமேயன்றி மகனைச் சிறிதளவும் வருத்தாது.
ஸ்ரீ கருட புராணம்

பல நூல்களின் மாயை' என்ற வலையில் விழாதே. பகவான் என்னவோ தெய்வ நம்பிக்கையால்தான் கிடைக்கிறார். 
இறைவன் தொடர்பு இல்லாத எல்லா உலக வைபவங்களையும் புல்லாக நினை. பகவானுடைய நாமசங்கீர்த்தனத்தில் ஈடுபட்டிரு } இதுதான் அனைத்து வேதங்கள், சாஸ்திரங்களுடைய சாரமாகும். 
 மகான்களுடைய சீரிய உபதேசம்

""அறம் செய்பவர்கள் சொர்க்கம் புகுகிறார்கள். அறம் செய்யாதவர்கள் நரகம் புகுகிறார்கள்'' என்று சான்றோர்கள் கூறுகிறார்கள். இதனால் சொர்க்கம், 
நரகம் இருப்பது உண்மை என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
 மணிமேகலை 

"ஓம்' என்ற மந்திரத்தின் மூலம் ஆன்மாவைத் தியானம் செய்யுங்கள். அஞ்ஞானம் என்ற இருளைக் கடந்து, மோட்சம் என்ற மறுகரைக்குச் செல்ல விரும்புகின்ற உங்களுக்கு ஆசிகள் நிறைவதாக.
முண்டக உபநிஷதம் 2.2.6

உலகில் பாவத்தையும் பழியையும் ஏற்படுத்தக்
கூடிய செயல்கள் இருக்கின்றன. அவற்றைச் சான்றோர் தாங்கள் இறப்பதானாலும் செய்யவே மாட்டார்கள்.
நாலடியார், மானம் 5

பிறர் பொருளைத் திருடக் கூடாது. கீழ் மக்களுடன் சேரக் கூடாது. எப்போதும் எவரையும் பகைக்கக் கூடாது.
 நீதி சாஸ்திரம்

மனிதர்களாகப் பிறந்தவர்கள் பிறருக்கு உதவும் பண்பாளர்களாக இருக்க வேண்டும்; பிறர் துன்பத்தைக் கண்டு மனமிரங்கி அவர்கள் துன்பத்தைப் போக்குவதற்குப் பாடுபட வேண்டும்.
 பட்டினத்தார்

பேயும், குரங்கும் எப்போதும் சும்மா இருக்காமல் தன்னிச்சையாகத் திரியும். அதுபோலவே நாய்களும், நரிகளும் திரியும். அவைபோல மனிதர்கள் இந்த உலகப் பொருள்களின்  மேல்  ஆசை வைத்துத் திரிவதால் எந்தப் பயனும் இல்லை.
 இடைக்காட்டுச் சித்தர்

தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com