ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்: சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.  
ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்: சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

17.03.2022 முதல் 11.07.2022 வரை உள்ள காலகட்டத்தில் உங்களின் கனவுகள் நிறைவேறும். மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் பணிபுரிவீர்கள். பொருளாதார நிலை உயரத் தொடங்கும். செய்தொழிலில் ஸ்திரத்தன்மையை காண்பீர்கள். குடும்பத்திலும் நிம்மதி பூத்துக்குலுங்கும். 

உற்றார் உறவினர்கள், நண்பர்களிடம் நன்றி உடையவர்களாக இருப்பீர்கள். உங்கள் துறையில் உயர்ந்தவர்களால் பாராட்டப்படுவீர்கள். செய்தொழிலில் இருந்த பழைய பிரச்னைகள் மறைந்து அனைத்து செயல்களும் சீராக நடக்க தொடங்கும். அதேநேரம் நண்பர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். "கொக்குக்கு ஒன்றே மதி!' என்ற ரீதியில் பணியாற்றவும். உடலாரோக்கியம், மன வளம் இரண்டும் உயர்வாகவே அமையும். முக்கியமான முடிவுகள் எடுக்கும் சமயங்களில் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு முடிவுகளை எடுக்க வேண்டிய காலகட்டமிது என்றால் மிகையாகாது. 

12.07.2022 முதல் 06.02.2023 வரை உள்ள காலகட்டத்தில் அனைத்து வேலைகளையும் பட்டியலிட்டு செய்து முடித்து விடுவீர்கள். உங்கள் வேலைகளைக் குறித்த காலத்திற்கு முன்பே செய்து முடித்து இலக்குகளை எட்டி விடுவீர்கள். எதிர்பார்த்த கடன்களும் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் செய்யும் தவறுகளைப் பெரிது படுத்தாமல் மன்னித்து விடுவீர்கள். 

கடந்த கால முதலீட்டிற்கு இந்த காலகட்டத்தில் பலன் கிடைக்கும். பெற்றோருடனும், குடும்பத்தாரிடமும் இருந்த பிணக்குகள் மறைந்து இணக்கங்கள் கூடும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். முக்கிய தருணங்களில் உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க தயக்கம் வேண்டாம். தன்னம்பிக்கைக் குறைவு உங்களை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளவும். நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளும் காலகட்டமிது. 

07.02.2023 முதல் 28.11.2023 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் செயல்களைத் துரிதமாக செய்து முடிப்பீர்கள். மற்றவர்களின் நம்பிக்கையைப் பெற உங்கள் கருத்துகளை ஒன்றுக்கு இரண்டு முறை தெளிவுபடுத்துவீர்கள். முகத்தில் பொலிவுடனும், நடையில் மிடுக்குடனும் வலம் வருவீர்கள். சமுதாயத்தில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். 
குழந்தைகளை வெளியூர், வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். வருமானத்தில் ஒரு பகுதியை தான தர்மத்திற்கும் பயன்படுத்துவீர்கள். இன்னும் பரந்த மனதுடன் இருந்து செயலாற்ற உங்களை நீங்களே தூண்டிக் கொள்வீர்கள். மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களால் நன்மைகள் கிடைக்கும். எதிர்ப்புகள் குறைந்து காணப்படும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். 

வியாபாரிகளுக்கு கூட்டாளிகளிடம் ஆதரவு பெருகும். வாடிக்கையாளர்களிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும். கடையை விரிவுபடுத்த முயற்சி எடுப்பீர்கள்.  

விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிகரித்து, தானியங்கள் நல்ல விலைக்கு விற்பனையாகும். உர மானியம் கிடைக்கப்பெறுவீர்கள். மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு வருமானத்தைப் பெருக்குவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் பெயரும் புகழும் உயரும். எதிரிகளின் கை தாழ்ந்து உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். தக்க சமயத்தில் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். 

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களால் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். திறமைகள் பளிச்சிடும் நேரமிது. 

பெண்மணிகள் வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடாமல் பொறுமையாக இருந்து அனைவரையும் அனுசரித்து நடக்கவும். குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் கிடைக்கும். கணவரது உடல் நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். 

மாணவமணிகள் படிப்பில் வெற்றி வாகை சூடுவீர்கள். உங்களின் ஞாபக சக்தியும் அறிவாற்றலும் அதிகரிக்கும். பெற்றோர்கள் மூலம் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.  

பரிகாரம்: ஸ்ரீராமரை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com