பொன்மொழிகள்!

கண்களுக்கு மை தீட்டிக்கொள்வது அழகுக்காக மட்டுமல்ல, குளிர்ச்சிக்காகவும் ஆகும்.
சுவாமி கமலாத்மானந்தர்
சுவாமி கமலாத்மானந்தர்

தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

கண்களுக்கு மை தீட்டிக்கொள்வது அழகுக்காக மட்டுமல்ல, குளிர்ச்சிக்காகவும் ஆகும். அத்தகைய குளிர்ச்சி மைக்கு இல்லாவிட்டால், அதைத் தீட்டியதனால் கண்கள் கெட்டுவிடுமேயன்றி பயன் எதுவும் ஏற்படாது.
அதுபோலவே ஸ்ரீ ராமபிரானைக் காண்பதால் மட்டும்தான் கண்களுக்குப் பெருமையே தவிர, மாயையாகிய மை பூசி, உலகத்தில் ஏற்படும் விஷய போகங்களைக் கண்டு களிப்பதனால் பயன் இல்லை.

துளசிதாசர் இயற்றிய "வினய பத்ரிகா'


பயந்து சரணடைந்தவனைக் காப்பாற்ற வேண்டும். அவ்விதம் காப்பாற்றுபவன், எல்லா வகையிலும் பூரணமான அசுவமேதயாகத்தின் பலனைக் காட்டிலும் அதிகமான பலனை அடைகிறான்.         

 பஞ்சதந்திரம்

பெரும்பாலானவர்கள் தங்கள் நலத்தை மட்டும் தேடிக்கொள்கிறார்கள். வெகுசிலர்தான் தங்கள் உடன்பிறப்பாளர்களுக்கும் உறவினர்களுக்கும் நலன் செய்கிறார்கள். வேற்றுமையின்றி எல்லோருக்கும் நலன் செய்பவர்களே, பாராட்டுக்கு உரியவர்கள் ஆகிறார்கள்.      

மகான் துளசிதாசர்

மனதை அடக்கி உன்னிடத்திலேயே நீ ஆத்மாவை அறிந்துகொள்ள வேண்டும்; நீ பிறப்பும் இறப்பும் சேர்ந்த கடக்க முடியாத பிறவிப்பெருங்கடலைக் கடக்க வேண்டும்; பிரம்மரூப நிலைபெற்ற 
கர்மத்தைச் செய்ய வேண்டும்.

 விவேகசூடாமணி

அறங்கள் செய்யாமல் இருப்பதும், அடுத்தவர் கைகூப்பி வணங்கும்போது, பதிலுக்குக் கைகூப்பி வணங்காமல் இருப்பதும் கொடுமை.  
 வள்ளலார்

நன்மை தீமைகளைப் பாகுபடுத்திப் பார்க்கும் திறமையுடைய ஒருவன், "தான்' என்ற அகந்தையை விட்டொழிக்க முடியும். அதுவும் இறைவனின் கருணை ஒன்றினால்தான் முடியும். இந்தக் கருணையை அடையப் பெற்றவன் சமூகம் மற்றும் ஆன்மிக சம்பந்தமான அகம்பாவத்தை ஒழிக்க முடியும்.

  ஸ்ரீ நாராயண குரு

ஸ்ரீ கிருஷ்ணா! உனது அமுதமான சரிதம் வேகும் நெஞ்சங்களை வாழ வைக்கிறது; உள்ளத்தின் மாசுகளைக் களைகிறது; கேட்பதற்குப் பரம மங்களகரமாக இருக்கிறது; சகல சிரேயûஸயும் அளிக்கிறது; ஞானியர் போற்றும் உன் சரிதையை உலகில் வாழும் எல்லா மக்களும் போற்றித் துதிக்கிறார்கள்.    

ஸ்ரீமத் பாகவதம்

இறைவனின் திருவருளால் நான் பெற்றிருக்கும் இந்த இன்பம் அனைத்தையுமே உலகில் உள்ள அனைத்து உயிர்களும் பெற வேண்டும்.
திருமூலர் 

பயமும் தயக்கமும் உள்ளவனைத் தோல்வி தொடர்ந்துகொண்டே இருக்கும்.
சாணக்கியர் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com