சிம்ம ராசிக்காரர்கள் இதை மட்டும் செய்யாதீங்க! வாரப் பலன்கள்

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 
சிம்ம ராசிக்காரர்கள் இதை மட்டும் செய்யாதீங்க! வாரப் பலன்கள்

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் மதிப்பு மரியாதை, கௌரவம் உயரத் தொடங்கும்.  நவீன உபகரணங்களை வாங்குவார்கள். உடல் ஆரோக்கியம் பலப்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகளில் திறமைகள் வெளிப்படும். வியாபாரிகள் புதிய யுக்திகளைக் கையாண்டு, வெற்றி பெறுவார்கள்.

விவசாயிகளுக்கு மானியங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத சில உறவுகளின் வாயிலாக, மாற்றங்கள் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு புதிய ஆதாயங்கள் கிடைக்கும். பெண்கள் குடும்ப ஒற்றுமையைப் பேணிக் காப்பார்கள். மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

தொழிலில் படிப்படியான வளர்ச்சி கிடைக்கும்.  வருவாய் சீரடையும். வராமல் இருந்த கடன் வசூலாகும். செயல்திறன் அதிகரிக்கும். வீடு, வாகனங்களை சீர் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். விவசாயிகளுக்கு வருவாய் கூடும். அரசியல்வாதிகள் மேலிடத்துடன் அனுசரித்து நடந்துகொள்வார்கள்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களின் மனதில் ஆன்மிகச் சிந்தனை மேலோங்கும்.

மாணவர்கள் கடுமையாக உழைத்து அனைத்து விஷயங்களிலும் வெற்றி காண்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் கை கூடும். குல தெய்வ வழிபாட்டை செய்து முடிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளைப் புரிந்துகொண்டு செயல்படுவார்கள். வியாபாரிகள் புதிய நுணுக்கங்களைத்  தெரிந்து கொள்வார்கள்.  விவசாயிகள் பயிர் விளைச்சலில் உயர்வைக் காண்பார்கள்.

கலைத்துறையினர் புதிய முயற்சியில் ஈடுபடுவார்கள். பெண்கள் கணவரின் குடும்பத்தினருடன் அனுசரித்து நடந்துகொள்வார்கள். மாணவர்கள் படிப்பில் தீவிர அக்கறை காட்டுவார்கள்.

சந்திராஷ்டமம் - 15.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். தான, தர்மங்களிலும் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தோரிடம் ஆதரவோடு நடந்துகொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும்.

விவசாயிகள் புதிய பயிர்களை ஊடுபயிராகவும் பயிரிடுவார்கள். வியாபாரிகள் கடினமாகப் பாடுபடுவார்கள். அரசியல்வாதிகள் தடைபட்ட பணிகளைச் செய்துமுடிப்பார்கள்.  

கலைத்துறையினருக்கு பயண வாய்ப்பு உண்டு. பெண்கள் புதிய சேமிப்புத் திட்டங்களில் சேருவார்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் -16,17.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். அவசியமற்ற பயணங்களைத் தவிர்த்துவிடவும். பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்து, அதற்கேற்ப நடப்பார்கள். விவசாயிகள் பிறரின் அன்பையையும், ஆதரவையும் பெறுவார்கள்.

அரசியல்வாதிகளுக்கு லாபமான சூழல் உண்டாகும். கலைத்துறையினர் புதிய நுட்பங்களை கற்றுக் கொள்வார்கள். பெண்கள் குடும்ப முன்னேற்றத்துக்குப் பாடுபடுவார்கள். மாணவர்கள் விளையாட்டில் தேர்ச்சி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - 18,19,20.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் சந்தோஷம் கூடும். உறவினர்களின் எண்ணங்களைப் புரிந்துகொள்வீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். வெற்றி கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சுமுகமான சூழ்நிலை உண்டாகும். வியாபாரிகள் புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவார்கள். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகள் தேடி வரும்.

அரசியல்வாதிகள் மேலிடத்துக்குத் தகவல் அனுப்பும்போது கவனமாக இருக்க வேண்டும். கலைத்துறையினரின் செல்வாக்கு உயரும். பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவார்கள். மாணவர்கள் குறைகளைத் திருத்திக் கொள்வார்கள்.

சந்திராஷ்டமம் - 21

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

தொழிலைத் திறம்பட நடத்துவீர்கள். கவலைகளை மறந்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். பேச்சில் நிதானம் தேவை.

உடல் ஆரோக்கியத்தையும் மன வளத்தையும் வளர்த்துக் கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உபரி வருவாய் கிடைக்கும். வியாபாரிகள் கூட்டு முயற்சியால் வெற்றி பெறுவீர்கள்.

விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளின் செயல்திறன் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

பெண்களின் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மாணவர்களுக்கு அனுகூலமான சூழல் உண்டு.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

உணர்ச்சி வசப்படாமல் சகஜமாகப் பழகுவீர்கள். பேச்சுத் திறமையினால் காரியங்களில் வெற்றி உண்டாகும்.  சவால்களையும் போட்டிகளையும் திறம்பட சமாளிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பயணம் உண்டாகும்.

வியாபாரிகள் முதலீடுகளால் வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். அரசியல்வாதிகள் ரகசியங்களைப் பகிர வேண்டாம்.

கலைத்துறையினர் முன்னுதாரணமாக நடந்துகொள்வார்கள். பெண்கள் வசிக்கும் வீட்டை பராமரிப்பார்கள். மாணவர்கள் உடற்பயிற்சிகளைச் செய்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

தொழிலில் தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள்.  புது அனுபவங்களைப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களின் பணிகளை சக ஊழியர்கள் பகிர்ந்துகொள்வார்கள். வியாபாரிகள் நண்பர்களுடன் சேர்ந்து, கடையை விரிவுபடுத்துவார்கள்.  விவசாயிகள் பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வார்கள்.

அரசியல்வாதிகள் மாற்றுக்கட்சியினரின் நடவடிக்கைகளை எச்சரிக்கையுடன் கவனித்து வரவும்.

கலைத்துறையினரின் புகழ், செல்வாக்கு உயரும். பெண்கள் குடும்பத்தாரின் எண்ணத்துக்கேற்ப செயல்படுவார்கள். மாணவர்கள் பிறருக்கு உதவுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

புதிய நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் உண்டாகும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். பழைய கடன்களை அடைப்பீர்கள். பெரியோரின் ஆசி கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். விவசாயிகள் நிலம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு மறைமுக எதிர்ப்புகள் மறையும். கலைத்துறையினரின் செயல்பாடுகள் உயரிய இலக்குகளை எட்டும். பெண்கள் சேமிப்பைக் கூட்டுவார்கள். மாணவர்கள் பெற்றோரின் தேவைகளை நிறைவேற்றுவார்கள்.

சந்திராஷ்டமம்-இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

எடுத்த செயல்களைத் திட்டமிட்டு செய்துமுடிப்பீர்கள். வெளியிலிருந்து அனுகூலமான செய்தி கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். உடன்பிறந்தோரிடம் விட்டுக் கொடுத்து பழகுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து நடப்பார்கள். வியாபாரிகள் சவாலான வேலைகளையும் போட்டிகளையும் சுலபமாக வெற்றி கொள்வார்கள்.

விவசாயிகளுக்கு விளைபொருள்களின் விற்பனை அமோகமாக அமையும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மாணவர்கள் யோகா கற்றுக் கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். புதிய முயற்சிகளையும் திறம்பட செய்து முடிப்பீர்கள்.  பெற்றோருடன் இணைக்கமாகப் பழகுவீர்கள். முகத்தில் பொலிவுடனும் நடையில் மிடுக்குடனும் காணப்படுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் எண்ணங்களுக்குத் தகுந்தபடி நடந்துகொள்ளவும்.  வியாபாரிகள் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம்.

விவசாயிகள் புதிய கால்நடைகளை வாங்குவார்கள். கலைத்துறையினருக்கு அந்தஸ்து கூடும்.

பெண்களுக்கு கணவரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு பிறரிடம் இருந்த கருத்துவேறுபாடுகள் மறையும்.

சந்திராஷ்டமம் - இல்லை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com