சூரிய பகவானின் சிறப்புகள்!

சூரியபகவான் ஆத்ம காரகர் ஆவார். இவரை வைத்தே ஜாதகங்களில் லக்னம் கணிக்கப்படும்.
சூரிய பகவானின் சிறப்புகள்!

சூரியபகவான் ஆத்ம காரகர் ஆவார். இவரை வைத்தே ஜாதகங்களில் லக்னம் கணிக்கப்படும். ஜீவனுக்கு உறுதியையும், தேஜசையும் தருகின்றவர்.  சூரிய பகவானின் அருளைப் பெற்றவர்கள் பரந்த முகத்தையும் ஒளிவீசும் கண்களையும் பெற்றிருப்பார்கள். பிதுர் காரகர் என்று அழைக்கப்படும் இவர் பெண்களின் சுகமான  மணவாழ்க்கைக்கு உத்திரவாதம் தருகிறார் .  

சுமாரான உயரம், சத்துவகுணம், ஆண் கிரகம், பித்த தேகம், எலும்புக்கு அதிபதி, கோதுமை தானியம், சந்தனம், சிவப்பு நிறம், கிழக்கு திசை, ஞாயிற்றுக்கிழமை, செந்தாமரை,  பகலில் வலிமை , கசப்பும் காரமும் இணைந்த சுவை, வட்ட வடிவமான வடிவம், அக்னி (நெருப்பு), தாமிரம் , மாணிக்கம் எருக்கு, ஆண்கள் ஜாதகத்தில் வலக்கண்ணையும் பெண்கள் ஜாதகத்தில் இடக்கண்ணையும் குறிப்பவர், ஆரஞ்சு நிறம், சம்ஸ்கிருதம், தெலுங்கு ஆகிய இரண்டு  மொழிகளையும் தன் மொழிகளாகக் கொண்டும் இருப்பவர். 

அரசாங்கம், அரசாங்க தொடர்பு,  தலைமை நிர்வாகம் சரீர பலம் உடலின் முதுகின் மேல்பாகம், இருதயம், தகப்பனார், தகப்பனாரின் சொத்துக்கள், தகப்பனாரின் உடன் பிறந்தவர்கள், சம்பாத்தியம்,  ஆண்மை பரிசுத்தம் பராக்கிரமம் காடு, மலை, வயல், புகழ், கீர்த்தி ஆகியவைகளுக்கு காரணமாகிறார்.

சூரிய பகவானுக்கு நட்பு கிரகங்கள்:  குரு, சந்திரன், செவ்வாய் பகவான்கள்.  சமக்கிரகம்: புதன் பகவான். பகை கிரகங்கள்: சுக்கிரன் சனி ராகு கேது பகவான்கள். உச்ச ம்:  மேஷ ராசி (10  பாகை வரையில் பரம உச்சம்) மூலத்திரிகோணம்: சிம்மராசி 20 பாகை வரை. ஆட்சி: சிம்ம ராசி இருபத்தி 21ம் பாகை முதல் 30 பாகை வரை. நீச்சம் துலாம் ராசி (10 பாகை வரை பரம நீச்சம்)
பார்வை: ஏழாம் பார்வை மட்டும்.

பரிகாரம் : காயத்ரி ஜபம், சூரிய நமஸ்காரம்.  
ஸ்லோகம் : ஆதித்திய ஹிருதயம் 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com