பொன்மொழிகள்!

ஆணவம், கன்மம், மாயை என்று சொல்லப்படும் மும்மலங்களும், பிறவிப் பிணியும் முருகனருளால் நீங்க வேண்டும். 
சுவாமி கமலாத்மானந்தர்
சுவாமி கமலாத்மானந்தர்


ஆணவம், கன்மம், மாயை என்று சொல்லப்படும் மும்மலங்களும், பிறவிப் பிணியும் முருகனருளால் நீங்க வேண்டும். 
அருணகிரிநாதர்

கோசல நாட்டு மக்கள் நல்லொழுக்கம் வாய்க்கப் பெற்று உயர்ந்த பண்பு உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் புற அழகைக் காட்டிலும் அக அழகுக்கே அதிக முக்கியத்துவம் தந்தார்கள்.  அவர்களிடம் பொய், வஞ்சனை, சூது முதலிய தீய குணங்கள் இல்லாததால் நீதி நெறி ஒங்கியிருந்தது. பெண்கள் மிகவும் அன்புடையவர்களாக இருந்ததால் அறச்செயல்கள் - தர்ம காரியங்கள் நிறைந்த அளவில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவர்கள் கற்பு நெறியில் தவறாமல் நடந்துக் கொண்டிருந்ததால், பருவ மழை தவறாது பெய்து நாடு செழிப்புடன் இருந்தது.
கம்ப ராமாயணம், பாலகாண்டம், நாட்டுப்படலம் 59

முருகப் பெருமானே! எங்களுக்கு வரங்களை அளிப்பவனே ! இளமை வாய்ந்தவனே ! எப்போதும் யோக நிலையில் இருக்கும் மயில் வாகனனே ! எங்களுக்கு ஏற்படும் அச்சங்களை அழித்து ஒழிப்பவனே ! 

உலகத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல், சதா சர்வ காலமும் உன்னையே நினைத்திருப்பது மோட்ச நெறியாகும். அந்த மோட்ச நெறியை நாங்கள் அனுபவத்தில் காணும்படிக்கு, உனது கமலப்பாதங்களை எப்போது எங்களுக்கு அளிப்பாய்?
- கந்தரனுபூதி , 21

இறந்து விட்ட தந்தைக்காக ஒருவன் தான தர்மங்கள் செய்தால் அதற்கான உயர்ந்த பலன் நிச்சயம் உண்டு. 
கருட புராணம்

குளவி புழுவைக் கொண்டு வந்து தன் கூட்டில வைத்து, அதைக் கொத்தித் தன்னைப் போலவே குளவியாக மாற்றும். அது போல், அடங்காத மனதை அடிக்கடி தியானம் செய்வதால் நம் வசப்படுத்த முடியும்.
இடைக்காட்டுச் சித்தர்

இறைவனின் நாமமகிமை வெறும் புகழுரை (பொருளற்றது )' என்று பேசுகின்றவர்களுக்குப் பெரிய பாவம் ஏற்படும். கேட்பவர்களுக்கும் அதே நிலைதான் ஏற்படும். 
 மகான்களுடைய சீரிய உபதேசம்

இறைவன் எல்லாம் அறிந்தவர், அனைத்து ஞான சொரூபமானவர், ஆனந்த வடிவினர், அழிவற்றவர்.  இந்த உலகம் யாருடைய மகிமையே, அந்த இறைவன் ஒளிமயமான இதயத்தில் இருக்கும் வெளியில் ஆன்மாவாக ஒளிர்கிறார். 
 முண்டக உபநிஷதம் 2.27

ஆணவம், கன்மம், மாயை என்று சொல்லப்படும் மும்மலங்களும், பிறவிப் பிணியும் முருகனருளால் நீங்க வேண்டும். 
அருணகிரிநாதர்

இறந்து விட்ட தந்தைக்காக ஒருவன் தான தர்மங்கள் செய்தால் அதற்கான உயர்ந்த பலன் நிச்சயம் உண்டு. 
 கருட புராணம்

தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com