அறிவியலால் அறிய முடியாத ரகசியம்!

 பொதுவாக, சிவன் கோயில்களில் நந்தியம் பெருமானார் கர்ப்பக் கிரகத்தில் அருள்பாலிக்கும் சிவனை நோக்கியபடி இருப்பார் அல்லவா? 
அறிவியலால் அறிய முடியாத ரகசியம்!

 பொதுவாக, சிவன் கோயில்களில் நந்தியம் பெருமானார் கர்ப்பக் கிரகத்தில் அருள்பாலிக்கும் சிவனை நோக்கியபடி இருப்பார் அல்லவா?
 ஆனால், நாம் இப்பொழுது காணப் போகும் கோயிலில், நந்தியம்பெருமானார் சிவனை நோக்கி இருப்பதுடன், அவரைவிட உயரத்தில் இருந்து கொண்டு தன் திருவாய் வழியாக நீரை லிங்கத்துக்கு அபிஷேகம் செய்வது சிறப்பும், புதுமையும் நிறைந்ததாக இருக்கிறது.
 நந்தி வாயில் இருந்து வெளியேறும் நீரானது, செம்பினால் ஆன பெரிய தாராபாத்திரத்தில் விழுந்து, அதன் கீழுள்ள துளை வழியாக அபிஷேகப் பிரியரான சிவனை அபிஷேகம் செய்வது போல் அமைந்துள்ளது. அமைந்த கல்யாணி என்று கூறப்படும் குளத்தில் நிறைகிறது. இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பது இன்னும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு சவாலாகவே இருந்து வருகிறது.
 அபிஷேகத் தீர்த்தம் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுவதால், இந்தத் தீர்த்தத்தைப் பருகினால் தீராத நோய்களும் தீரும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. எனவே, இந்தக்கோயிலில் எப்போதும் கூட்டம் இருந்த வண்ணம் உள்ளது.
 அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டுவதற்காக நிலத்தை தோண்டியபொழுது, கோயில் காணப்பட்டதாகத் தரவுகள் கூறுகின்றன. புதைந்திருந்த இத்திருக்கோயில் 1997 -ஆம் ஆண்டு தொல்லியல் துறையினரால் நிறுவப்பட்டது.
 சாலையிலிருந்து பல அடிகள் இறக்கத்தில் அமைந்த கோயிலுக்குத் தற்போது வெளிப்புற, உட்புற நுழைவாயில்களும் சுற்றுச்சுவர்களும் கட்டப்பட்டுள்ளன.
 கல்யாணி என்று கூறப்படும் குளத்தில் ஆமைகள் பல நீந்தி விளையாடுகின்றன. பக்தர்கள் தம் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி, நாணயங்களைக் குளத்தில் வீசிச் செல்வதும் நடைபெறுகிறது.
 குளத்தின் படிக்கட்டுகளில் அமைந்திருக்கும் நந்தியின் காதுகளில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களைக் கூறிச் செல்கிறார்கள். அப்படி கூறப்படும் வேண்டுதல்கள் நல்லபடியாக நிறைவேறி வருவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.
 "கார்பன் டேட்டிங்' என்று கூறப்படும் கரிமக் கால கணிப்பு முறையின்படி, இந்தக் கோயில் ஏழாயிரம் வருடம் பழைமையானது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
 சத்ரபதி சிவாஜியின் தம்பி, வெங்கோஜி ராவ் போன்ஸ்லே, திராவிடக் கட்டடக் கலையைப் பின்பற்றி எழுப்பிய கோயில் சாலைக்கு மறுபுறமுள்ளது. காடு மல்லேஸ்வரர் கோயில் என்று அந்தக் கோயிலுக்குப் பெயராகும். நந்தி தீர்த்த கோயிலும் அந்தக் காலத்திலேயே அவரால் கட்டப்பட்டு, பின்னர் புவிக்குள் சென்றிருக்க வேண்டும் என்பது ஒரு அனுமானமாக இருந்து வருகிறது.
 இக்கோயிலில் மூலவர் சிவன் என்றாலும், தெற்கு நோக்கி நந்தி இருப்பதால், ஸ்ரீ தட்சிண முக நந்தி தீர்த்த கல்யாணி úக்ஷத்திரம் என்றுதான் இந்தக் கோயிலுக்கு பெயர். மொத்தத்தில் சிவனின் வாகனமான நந்தியை வழிபடுவதால் முக்கண்ணனின் கடாக்ஷம் பரிபூரணமாக கிடைக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
 தன்மையும், பாரம்பரியமும் ஒருங்கே அமைந்த இந்தக் கோயில், கர்நாடக மாநில அரசின் வசம் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தொன்மையும் பாரம்பரியமும் வாய்ந்த இந்தக் கோயில் பெங்களூரில் மல்லேஸ்வரம் பகுதியில், 17-ஆவது கிராஸில் கோயில் தெரு என்று கூறப்படும் தெருவில் அமைந்துள்ளது.
 தரிசன நேரம் காலை 7 முதல் 12 மணி வரையும் மாலை 5 முதல் 8 மணி வரையும் ஆகும்.
 -மாலதி சந்திரசேகரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com