நிகழ்வுகள்...

நாகப்பட்டினம் மாவட்டம் ஆச்சாள்புரம் - நல்லூர் ஸ்ரீசிவலோகத்தியாகராஜ சுவாமி தேவஸ்தானத்தில், ஸ்ரீதிருஞான சம்பந்த சுவாமிகள் திருக்கல்யாணப் பெருவிழா ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது.
நிகழ்வுகள்...

திருக்கல்யாணப் பெருவிழா

நாகப்பட்டினம் மாவட்டம் ஆச்சாள்புரம் - நல்லூர் ஸ்ரீசிவலோகத்தியாகராஜ சுவாமி தேவஸ்தானத்தில், ஸ்ரீதிருஞான சம்பந்த சுவாமிகள் திருக்கல்யாணப் பெருவிழா ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது.  நிகழ்ச்சி நிரல்: காலை 8.45 மேல் 9.45 வரை கடக லக்னத்தில் திருஞான சம்பந்தர் உபநயனம், திருவீதி வலம் வருதல்,  மாலை 5} திருமுறைகள் திருவீதி வலம் வருதல், மாலை 6} ஞானசம்பந்தரின் வாழ்வும் வாக்கும் எனும் தலைப்பில் சொற்பொழிவு,  இரவு 8.30} மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றுதல்,  ஊஞ்சல் திருக்கல்யாணம்,  வெள்ளிப் பல்லக்கில் திருவீதிவலம் வருதல்,  பின்னிரவு} பேரின்ப பேறளிக்கும் திருப்பதிகம் ஓதுதல். 

தஞ்சை முத்து பல்லக்கு

திருஞான சம்பந்தர் குரு பூஜை முன்னிட்டு,  தஞ்சையில் உள்ள 11 கோயில்களிலிருந்து சுவாமி புறப்பாடாகி முத்து பல்லக்கில் திருவீதி உலாவாக ஜூன் 5 இரவு புறப்பட்டு, மறுநாள் காலை  ராஜ வீதிகளில் வலம் வந்து அந்தந்த கோயில்களுக்கு வந்து சேருகிறது. இந்தப் பாரம்பரிய விழாவில் பங்கேற்கும் கோயில்கள்; கீழவாசல் வெள்ளை விநாயகர், குறிச்சி தெரு சுப்பிரமணிய சுவாமி, ஆட்டு மந்தை தெரு பாலதண்டாயுதபாணி சுவாமி, சின்ன அரிசிக்காரத் தெரு பழனியாண்டவர், மகாநோம்புச் சாவடி ஜோதி விநாயகர்,  கீழவாசல் உஜ்ஜைனி காளிகோயில் கல்யாண கணபதி, தெற்கு ராஜ வீதி கமலரத்ன விநாயகர், மேலராஜ வீதி சுப்பிரமண்ய சுவாமி, காமராஜர் காய்கறி மார்க்கெட் செல்வவிநாயகர், வடக்கு வாசல் வடபத்ர காளியம்மன், மேலவெளி வெற்றி முருகன்.

வைகாசி பிரம்மோற்சவம்

கும்பகோணம் அருகேயுள்ள நாதன்கோயில் ஸ்ரீஜகந்தாத பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் ஜூன் 2}இல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய விழா நாள்கள்: ஜூன் 5 கருட வாகனம், 8 திருக்கல்யாண உற்சவம், 9 திருவேடுபரி திருமங்கையாழ்வார் புறப்பாடு, 10 திருத்தேர், 11புஷ்ப யாகம்.
தொடர்புக்கு} 98437 95904.

மகா பெரியவா ஜெயந்தி உற்சவம்

செங்கல்பட்டு அருகேயுள்ள  ஆத்தூர் ஸ்ரீசதுர்வேத வித்யா பாட சாலையில் ஸ்ரீமஹா பெரியவா 130}ஆவது ஜெயந்தி உத்ஸவம் ஜூன் 3}இல் நடைபெறுகிறது.  
தொடர்புக்கு 98844 02624.

தேர்த் திருவிழா

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீபாடலேஸ்வரர் கோயிலில் ஜூன் 2}இல் தேர்த் திருவிழா, பஞ்ச மூர்த்திகள் திருக்கோயில் வந்தடைதல், 3}இல் நடராஜர் திருக்கல்யாணமும், முத்துப் பல்லக்குகளில் ராஜ வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

திருக்கல்யாண வைபவம்

ஆம்பூர் அருகேயுள்ள கீழ்முருங்கை கிராமத்தில் உள்ள அருள்தரும் பிரம்மராம்பிகை தாயாருக்கும்,  அம்மையப்பருக்கும் திருக்கல்யாண வைபவம் ஜூன் 3}ஆம் தேதி  மாலை 6 முதல் 7.30 மணி வரை நடைபெறுகிறது.

பூமி பூஜை

சேலம் மாவட்டம்  கெங்கவல்லி அருகேயுள்ள ஆனையாம்பட்டி அக்ரஹாரம் ஸ்ரீகோதண்டராம சுவாமி பஜனை மடத்தின் புனரமைப்புக்கான பூமி பூஜை ஜூன் 4ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com