இந்த வாரப் பலன்கள் (மார்ச் 15 - 21)

இந்த வாரம் யாருக்கு என்னென்ன பலன்கள்....வாங்க தெரிஞ்சிக்கலாம்.
இந்த வாரப் பலன்கள் (மார்ச் 15 - 21)

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (மார்ச் 15 - 21) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் படிப்படியாக உயரும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். ஆன்மிகச் சிந்தனைகள் மேலோங்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் சகஜமாகப் பழகுவீர்கள்.

வியாபாரிகளுக்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கூடும். விவசாயிகளுக்கு வெற்றிகள் உண்டு.

அரசியல்வாதிகளுக்கு பாராட்டுகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு மனதுக்கினிய சம்பவம் நிகழும்.

பெண்களுக்கு மனச் சங்கடங்கள் மறையும். மாணவர்களுக்கு உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

பொருளாதாரப் பிரச்னைகள் தீரும். யோகா கற்பீர்கள். வீட்டிலும் வெளியிலும் பேச்சுவார்த்தைகளில் கவனமாக இருப்பீர்கள். புதிய தொழில்நுட்பங்களைத் தொழிலில் புகுத்துவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் உயரும்.

வியாபாரிகளுக்கு சிரமங்கள் குறையும். விவசாயிகளுக்கு மகசூல் சுமாராக இருக்கும். அரசியல்வாதிகள் பிடிவாதங்களைத் தவிர்க்கவும்.

கலைத் துறையினர் பயணங்களில் மகிழ்ச்சி அடைவீர்கள். பெண்கள் கணவரின் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவீர்கள். மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

தொழிலில் எதிர்பார்த்த ஏற்றம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான சூழல் உருவாகும். குடும்ப ரகசியங்களைக் காப்பாற்றுவீர்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.

வியாபாரிகள் சிறிய முதலீடுகளைச் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் பிறரின் ஆதரவைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்களுக்கு சிறிது குழப்பமான சூழல் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் வளர்ச்சிக்கு அடித்தளமிடுவீர்கள். கடன் தொல்லை அகலும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு உண்டு.

வியாபாரிகள் கூட்டாளிகளுடன் இணக்கமாகப் பழகுவீர்கள். விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளைச் சரியான நேரத்தில் பயன்படுத்துவீர்கள்.

அரசியல்வாதிகள் தங்களால் இயன்ற மக்கள் பணிகளைச் செய்வீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் புதிய பொருள்களை வாங்குவீர்கள். மாணவர்களுக்கு வயிற்று உபாதைகள் வந்து நீங்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

சரியாகத் திட்டமிட்டு வேலைகளை முடிப்பீர்கள். புதிய பொறுப்புகள் தேடி வரும். கடினமாக உழைத்து தொழிலில் இலக்குகளை எட்டுவீர்கள். பழைய கஷ்டங்கள் தீர்ந்துவிடும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின்

உதவியோடு பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரிகள் பழைய கடன்களைத் தீர்ப்பீர்கள். விவசாயிகள் அதிகம் உழைக்க வேண்டி வரும்.

அரசியல்வாதிகளுக்கு நல்ல நேரம் உண்டாகும். கலைத் துறையினரின் திறமைகள் பளிச்சிடும். பெண்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். மாணவர்கள் தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பெரியோர்களின் ஆசி உந்துசக்தியாக அமையும். தொழிலில் சுறு சுறுப்புடன் ஈடுபடுவீர்கள். இல்லத்தில் நிம்மதி நிறையும். பெற்றோரின் உடல்நலம் சிறப்படையும். உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.

வியாபாரிகள் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். விவசாயிகள் கொள்முதலில் கவனமாக இருப்பீர்கள்.

அரசியல்வாதிகள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு பாராட்டுகள் குவியும். பெண்களுக்கு கணவருடன் அந்நியோன்யம் கூடும். மாணவர்கள் விருப்பமான பாடப் பிரிவுகளில் சேர்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும். சொத்துகளில் இருந்து வருமானம் வரத் தொடங்கும். குழந்தைகள் விஷயத்தில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை பொறுமையுடன் கையாள்வீர்கள்.

வியாபாரிகள் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். விவசாயிகள் புதிய குத்தகை எடுக்க முயற்சிப்பீர்கள். அரசியல்வாதிகள் மக்கள் நலப் பணிகளில் கவனத்துடன் செயல்படுவீர்கள்.

கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வீர்கள். மாணவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - மார்ச் 15, 16.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

தெய்வப் பணிகளில் அதிக ஈடுபாடு உண்டாகும். வெற்றிகள் குவியும். குழந்தைகளால் ஓரிரு எண்ணங்கள் நிறையும். வீண்வாக்குவாதங்களிலிருந்து ஒதுங்கி இருக்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்வீர்கள்.

வியாபாரிகள் கொடுக்கல் - வாங்கலில் உயர்வைக் காண்பீர்கள். விவசாயிகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவீர்கள். அரசியல்வாதிகள் பொறுமையாக இருக்கவும். கலைத் துறையினருக்கு பண வரவு உண்டு.

பெண்களுக்கு மருத்துவச் செலவுகள் குறையும். மாணவர்கள் யோகா கற்பீர்கள்.

சந்திராஷ்டமம் - மார்ச் 17, 18, 19.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

உடல் உபாதைகளில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பப் பொறுப்புகளை ஏற்பீர்கள். உங்கள் காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகள் நன்கு யோசித்தபிறகே முதலீடு செய்வீர்கள். விவசாயிகள் செலவுகளைக் குறைப்பீர்கள்.

அரசியல்வாதிகள் சிந்தித்து காரியமாற்றுவீர்கள். கலைத் துறையினர் ரசிகர்களின் ஆதரவால் மனம் மகிழ்வீர்கள். பெண்கள் கடன் வாங்க மாட்டீர்கள். மாணவர்கள் கவனம் சிதறாமல் படித்து வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - மார்ச் 20, 21.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

விவேகத்துடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்பு கூடி வரும். சமுதாயத்தில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். ஆகார விஷயங்களில் கவனமாக இருக்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். விவசாயிகளுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள் கவனமாக இருக்கவும்.

கலைத் துறையினர் பிறருக்கு உதவுவீர்கள். பெண்களுக்கு பெற்றோர் வழியில் சொத்துகள் கிடைக்கும். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

இயந்திரப் பணிகள் லாபம் தரும். சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம், மனவளம் மேம்படும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை நம்பி எந்தக் காரியத்தையும் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரிகளுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். விவசாயிகளுக்கு பழைய கடன்கள் வசூலாகும். அரசியல்வாதிகள் சிரமமான காரியங்களை செய்து முடிப்பீர்கள்.

கலைத் துறையினருக்கு ரசிகர்களின் ஆதரவு சிறக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். மாணவர்களுக்கு வெளிநாடு சென்று படிக்கும் யோகம் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

திறமைக்குத் தகுந்த வேலைகளைச் செய்வீர்கள். பண வரவு உண்டு. உடல் ஆரோக்கியத்தைக் கவனிக்கவும். தரும காரியங்களில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய, பதவி உயர்வுகள் உண்டு.

வியாபாரிகள் புதிய முதலீடுகள் செய்வீர்கள். விவசாயிகளுக்கு உடலுழைப்பு பெருகி லாபம் உயரும். அரசியல்வாதிகள் நேர்மையாகச் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். கலைத் துறையினர் புதிய பொறுப்புகளில் வெற்றியடைவீர்கள்.

பெண்கள் சேமிப்பைக் கூட்டிக் கொள்வீர்கள். மாணவர்கள் பெற்றோர் சொல் கேட்டு நடப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com