ஆதிதிருவரங்கத்தின் அதிசயங்கள்...

ஆதிதிருவரங்கத்தின் அதிசயங்கள்...

"ஆதி திருவரங்கம்' எனும் ஸ்ரீ ரங்கநாயகித் தாயார் சமேத ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் சுவாமி திருத்தலத்தின் மகிமையானது ஸ்கந்தபுராணம் உத்திரகாண்டத்தில் உமா மகேஸ்வர ஸம்வாதத்தில் 301 முதல் 306 வரையிலான அத்தியாயங்களில் "உத்திரரங்க மஹாத்மியம்' என்ற பெயரில் வடமொழியில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கோயிலானது விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட சங்கராபுரம் அருகேயுள்ளது.

108 திவ்ய தேசங்களைவிட மிகவும் பிரபலமான இந்தக் கோயில் "உத்தரங்கம்', "ஆதிரங்கம்' , "ஆதி திருவரங்கம்' என்ற பெயர்களாலும் அழைக்கப்படு

கிறது.

இதன் ஷேத்திரம் } கிருஷ்ணாரண்யம். மூர்த்தி } ஸ்ரீ ரங்கநாத பெருமாள். தாயார் } ஸ்ரீ ரங்கநாயகித் தாயார். பெருமாள் விமானம் } சந்தோமயம் . தீர்த்தம் } சந்திர புஷ்கரணி , தென்பெண்ணை நதி . தல விருட்சம் } புந்நாக மரம்.

விஷ்ணுவின் முதல் அவதாரத்தில் ஆதிதிருவரங்கம் நிறுவப்பட்டது. ஆதிகாலத்தில் சோமுகன் என்னும் அசுரன் கடும் தவம் புரிந்து, அழியாமையைப் பெற்றான். இதனால் தேவர்களும், முனிவர்களும் மிகுந்த வருத்தம் அடைந்து திருப்பாற்கடல் சென்று பகவானை பிரார்த்தனை செய்து, வேதத்தை மீட்டுக் கொடுக்குமாறு வேண்டினர். உடனே ஸ்ரீ நாராயணன் யுத்தம் புரிய சோமுகன் சோர்வடைந்து கடலுக்குள் சென்று தன்னை மறைத்துகொண்டான். நாராயணனும் ஒளிந்து கொண்டிருந்த சோமுகனை "மத்ஸ்யா' } அவதாரம் மூலம் சம்ஹரித்து வேதங்களைக் கொண்டுவந்து மீளவும்,

இந்த ஷேத்திரத்தில் பிரம்மாவுக்கு உபதேசித்தார்.

கிருதயுகத்தில் சுரத கீர்த்தி என்னும் தொண்டை மன்னவன் புத்திரப் பாக்கியம் இல்லாமல் மிகவும் வருந்தினார். அப்போது, நாரதர் அறிவுரைகளுக்கிணங்க, இத்தலத்தில் பாம்பனை மேல் கண் வளரும் திருவரங்கநாதனை மனைவியுடன் வந்து வேண்ட நான்கு மகன்களைப் பெற்று மகிழ்ந்தான் .

சந்திரன் ஒருசமயம் தனது மனைவிகளின் சாபத்தால் கலைகள் மறைந்து ஒளி மங்க, இங்கு வந்தடைந்து பகவானை வேண்டி கலைகள் மீண்டும் வளரப் பெற்றான். சந்திரன் கோயிலின் தென் கிழக்கில் உள்ள புஷ்பகரணியி

லிருந்து தவம் செய்ததால்,

அந்தக் குளத்துக்கு "சந்திரபுஷ்பகரணி' என்று பெயர் உண்டாயிற்று.

"சிலகாலம் சென்றவுடன் தேவர்கள் மீளவும் சுவாமியைத் தமது திவ்ய ஸ்தானத்துக்கு எழுந்தருள வேண்டும்' என்று வேண்ட அங்கிருந்த முனிவர்களும் மற்றவர்களும் சுவாமியை விட்டுப்பிரிய மனம் வராமல் பரிதவித்தனர். அப்போது விஸ்வகர்மா என்கிற தேவ தச்சனை பெருமாள் வரவழைத்து, தம்மைப் போல் ஒரு திவ்ய மங்கள விக்கிரகத்தை உருவாக்கும் படி நியமித்தார். அதன்படி ,அவரும் செய்ய

பகவானும் அந்த பிம்பத்தில் சாந்நித்தியமாகி மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

தற்போது கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.

தொடர்புக்கு} 04153 293677.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com