பிள்ளைப் பேறு கிடைக்க...

மூன்றாம் காட்சியில் முனிவருக்குக் காட்சிதந்து அவரை இறைவன் தன் உடம்போடு சேர்த்துகொண்டார்.
பிள்ளைப் பேறு கிடைக்க...
Published on
Updated on
1 min read

யமுனை நதிக்கரையில் வேதபுரத்தில் கருத்தமன் என்ற முனிவர் பிள்ளைப் பேறு இல்லாமல், சிவனை பிரார்த்தித்தார். குழந்தை பிறந்தபோது, "புண்டரீகர்' எனப் பெயரை முனிவர் சூட்டினார். பல்வேறு இடங்களில் உள்ள சிவத் தலங்களை முனிவர் தரிசித்தும், எண்ணிய பலன் கிடைக்காததால், கடைசியில் நாகப்பட்டினம் வந்தார்.

மூன்றாம் காட்சியில் முனிவருக்குக் காட்சிதந்து அவரை இறைவன் தன் உடம்போடு சேர்த்துகொண்டார். காயம் என்றால் உடம்பு. ஆரோகணம் என்றால் உடம்போடு சேர்த்தல் எனப் பொருள்படும். இதனால் இங்குள்ள இறைவனுக்கு "காயாரோகணர்' என்ற பெயர்.

வெப்பம் தாங்காமல் உலகம் நடுங்கியதால் மார்க்கண்டேயர், கெüதமர், வசிட்டர், காசிபர், புலத்தியர், அகத்தியர், ஆங்கிரசர் ஆகிய 7 முனிவர்கள் இங்கு முறையிட்டபோது, சோமாஸ்கந்தர் வடிவில் இறைவன் தோன்றி காட்சியளித்ததாகவும், முனிவர்களை லிங்கத்தின் புலத்திலும் பிரம்மனை லிங்கத்தின் அடியிலும் திருமாலை லிங்கத்தின் நடுவிலும் அமர்த்தியதாகவும் வரலாறு.

ஆதிசேஷனும் குழந்தைப் பேறுக்காக வேண்டி நாகை வந்து பெண்குழந்தை பிறந்ததாகவும், பிற்காலத்தில் அந்தப் பெண்ணை சாலிசுக மன்னன் மணந்ததாக வரலாறு.

சாலிசுக மன்னன் மகன் தொண்டைமான் ஆட்சிக்காலத்தில்தான் கோயிலின் முதலாம் ராஜகோபுரமும், பல்லவர் ஆட்சியின்போது, கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபமும் கட்டப்பட்டன.

17}ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர், டச்சுக்காரர்கள் ஆட்சியின்போது, திருப்பணி நடைபெற்றுள்ளது. நவக்கிரகங்கள் மேற்கு நோக்கியுள்ளன. சுந்தரர் பாடி பொருள் பெற்ற தலம். அப்பர், ஞானசம்பந்தர் வழிபட்ட தலம்.

நாகத்தை ஆபரணமாக அணிந்திருக்கும் விநாயகர் இங்குள்ளார். 5 நந்திகள் நேர்கோட்டில் உள்ளன.

இங்குள்ள ஆறுமுகப்பெருமான் ஒரே கல்லால் செதுக்கப்பட்டுள்ளது சிறப்பானது. கல் சங்கிலி அமைந்துள்ளது. மேல் விட்டத்தில் 12 ராசிகளும் உள்ளன. அழுகுனிச் சித்தரின் ஜீவசமாதியும் உள்ளது. அகத்தியருக்கு திருமணக் கோலத்தில், இறைவன் காட்சி கொடுத்த திருத்தலம் இது. தியாகேசப் பெருமான் அருள்பாலிக்கும் 7 தலங்களில் இதுவும் ஒன்று.

சோழ வளநாட்டில் காவிரித் தாயின் தென்கரையில் உள்ள 127 சிவத் தலங்களில் 82}ஆவதாகவும், 64 சக்திப் பீடங்களில் ஒன்றாகவும், 5 ஆட்சிப் பீடங்களில் (காசி, காஞ்சி, மதுரை, ஆரூர், நாகை) ஒன்றாகவும் நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகணம் எனப்படும் கோயில் உள்ளது.

"கார்த்திகை மாத சோமவாரத்தில் 1,008 வில்வத்தாலும், வியாழக்கிழமைகளில் சந்தனத்தால் பூஜித்தாலும் பிள்ளைப் பேறு உண்டாகும். சனீஸ்வரனை புதுமலர் கொண்டு பூஜித்தால் துன்பம் விலகும்' என்பது ஐதீகம். ராகு, கேது தோஷங்களுக்கு பரிகாரத் தலம்.

நாகை ரயில் நிலையத்துக்கு அருகே அமைந்துள்ள இந்தக் கோயில் கும்பாபிஷேகம் பிப்ரவரி 10}இல் நடைபெறுகிறது.

}ஆர்.வேல்முருகன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X