பாங்காக், ஜுலை 3 : தாய்லாந்தின் முதல் பெண் பிரதமராக யிங்லக் ஷினவத்ரா பதவியேற்கவுள்ளார்.
தாய்லாந்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் பியூ தாய் கட்சியின் அமோக வெற்றிப் பெற்றுள்ளது. மொத்தமுள்ள 500ல், அக்கட்சி 260 இடங்களில் வென்றுள்ளது. ஜனநாயகக் கட்சிக்கு 163 இடங்களே கிடைத்துள்ளன. பிரதமர் அபிஜித் வெஜ்ஜிவா தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.
பியூதாய் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யிங்லக் ஷினவத்ரா,தாய்லாந்தின் 28வது பிரதமராக பதவியேற்க உள்ளார். இவர், முன்னால் பிரதமர் தக்ஷின் ஷினவத்ராவின் இளைய சகோதரி ஆவார்.
பல கோடிகளுக்கு அதிபரான தக்ஷின் ஷினவத்ரா இப்போது துபையில் வசித்து வருகிறார். அவருக்கு எதிராக தாய்லாந்து நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்ட் நிலுவையில் உள்ளது.