பெய்ஜிங், ஜூலை 24: சீனாவில் அதிவேக "புல்லட்' ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பயணிகள் உயிரிழந்தனர்; 89 பேர் காயமடைந்தனர்.
÷பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று தெரிகிறது.
÷சீனாவின் கிழக்கு மாகாணத்தின் ஹிஜியாங் நகரில் சனிக்கிழமை, புல்லட் ரயில் ஒன்று பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ரயிலில் மின்சாரம் தடைபட்டதால் பாலத்திலேயே நின்றது.
÷சிறிது நேரத்தில் அந்த ரயிலுக்குப் பின்னால் வந்த மற்றொரு புல்லட் ரயில் வந்து மோதியது.
இதில் இரு ரயில்களும் பலத்த சேதமடைந்தன. ரயிலின் சில பெட்டிகள் பாலத்தில் இருந்து கீழே விழுந்தன. இரு ரயில்களிலும் மொத்தம் 200 பேர் வரை பயணம் செய்தனர். அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
÷இந்த புல்லட் ரயில்கள் 300 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடியது.
சீனாவில் ரயில்வே துறைக்கு மட்டும் அரசு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் செலவு செய்து வருகிறது.