ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்

டோக்கியோ, ஜூலை 23: ஜப்பானில் சனிக்கிழமை காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவுகோளில் இது 6.5 அலகுகளாக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நிலநடுக்கம், சுனாமி
Published on
Updated on
1 min read

டோக்கியோ, ஜூலை 23: ஜப்பானில் சனிக்கிழமை காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

 ரிக்டர் அளவுகோளில் இது 6.5 அலகுகளாக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நிலநடுக்கம், சுனாமி ஏற்பட்ட வடக்குப் பகுதியிலேயே மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாகத் தகவல்கள் தெரிய வரவில்லை. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. ஜப்பானி மியாகி பகுதியை ஒட்டி அமைந்துள்ள பசுபிக் கடலின் 40 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

 இதே இடத்தில்தான் கடந்த மார்ச் 11-ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு, பின்னர் சுனாமி அலைகள் ஜப்பானைத் தாக்கின. இதில் இதுவரை 22 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர். சுனாமி அலைகள் தாக்கியதான் காரணமாக ஃபுகுஷிமாவிலுள்ள அணு உலை வெடித்து கதிர்வீச்சும் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.