சிங்கப்பூர், பிப்.11: சிங்கப்பூரில், தமிழகத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
திருச்சியைச் சேர்ந்தவர் ராஜு அறிவழகன்(32). இவர் கடந்த 6 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அங்குள்ள ஒரு கோவிலில் தைப்பூசம் திருவிழாவில் பங்கேற்றுள்ளார். அதற்குப் பின் அவரைக் காணவில்லை என அவரது நண்பர்கள் போலீஸில் புகார் செய்தனர். இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள பாலத்துக்கு அருகே ஒரு சடலம் இருப்பதாகப் போலீஸ் தெரிவித்தனர்.
அது அறிவழகனின் உடல் தானா என அறிய அவரது அண்ணண் ராஜூ அன்பழகன் சென்று பார்த்தார். ஆனால் சடலம் அழுகிய நிலையில் இருந்ததால் அவரால் அடையாளம் காணமுடியவில்லை.பிரேத பரிசோதனைக்குப் பிறகு திங்கள்கிழமை அடையாளம் உறுதி செய்யப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.