சுடச்சுட

  

  குழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை

  By dn  |   Published on : 05th December 2012 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  norway

  நார்வேயில் குழந்தையை மிரட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில் இந்திய பெற்றோருக்கு சிறைத் தண்டனை விதித்து ஆஸ்லோ மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

  தங்களின் குழந்தையை முறையாகப் பராமரிக்காதது, மிரட்டல் விடுத்து அச்சுறுத்தியது, வன்முறையில் ஈடுபட்டது ஆகிய குற்றங்களுக்காக தந்தைக்கு 18 மாதங்களும், தாய்க்கு 15 மாதங்களும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  ஆந்திரத்தைச் சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினீயர் சந்திரசேகர், அவரது மனைவி அனுபமா. நார்வேயில் வசித்து வருகின்றனர்.

  இவர்களது 7 வயது மகன், பள்ளி வாகனத்தில் சிறுநீர் கழித்தான் என்றும், பள்ளியில் விளையாடக் கொடுத்த பொம்மை உள்ளிட்ட பொருள்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டான் என்றும் பள்ளியிலிருந்து புகார் தெரிவிக்கப்பட்டது.

  இதையடுத்து சந்திரசேகர் - அனுபமா தம்பதியினர், தங்களின் குழந்தையைக் கண்டித்தனர். இந்தியாவுக்கு அனுப்பி விடுவோம் என்று குழந்தையை அவ்விருவரும் அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

  இது குறித்து தெரியவந்ததும், போலீஸôரிடம் பள்ளி ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர். பெற்றோரை போலீஸôர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை, ஆஸ்லோ மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.

  விசாரணையின் முடிவில் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:÷""குழந்தையை பெல்ட் போன்ற பொருளால் தாக்கியுள்ளதும், கரண்டியை சூடுபடுத்தி காலில் சூடுபோட்டுள்ளதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதோடு, நாக்கில் சூடுபோட்டு விடுவோம் என்றும் பெற்றோர் மிரட்டியுள்ளனர். எனவே, தந்தைக்கு 18 மாதங்களும், தாய்க்கு 15 மாதங்களும் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. இத்தீர்ப்பை எதிர்த்து 2 நாள்களுக்குள் அவர்கள் மேல்முறையீடு செய்ய அனுமதியளிக்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இத்தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்யப்போவதாக பெற்றோரின் வழக்குரைஞர் தெரிவித்தார்.

  இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:÷""இந்த வழக்கில் தொடர்புடைய பெற்றோருடனும், அவர்களின் வழக்குரைஞருடனும் நார்வேயில் உள்ள இந்தியத் தூதரகம் தொடர்பு கொண்டுள்ளது. தூதரக ரீதியாகத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்'' என்றனர்.

  தீர்ப்பு குறித்து சந்திரசேகரின் உறவினர் ஷைலேந்திரா, ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:÷நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. பெற்றோர் சிறையில் அடைக்கப்பட்டால், குழந்தையைப் பராமரிக்க முடியாமல் போய்விடும். இது குழந்தைகளின் உரிமைக்கு எதிரான செயலாகும். இந்த விவகாரத்தில் இந்திய அரசு சரியாக செயல்படவில்லை. தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யவுள்ளோம். இந்திய அரசு தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்'' என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai