சுடச்சுட

  

  உலகின் அதிகாரம் மிக்க தலைவர்கள் பட்டியலில் சோனியா, மன்மோகன்

  By dn  |   Published on : 07th December 2012 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  voice

  உலகில் மிகுந்த அதிகாரம் படைத்த தலைவர்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஃபோர்ப்ஸ் இதழ் நடத்திய ஆய்வில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முதலிடத்தில் உள்ளார். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 51 வயதான ஒபாமா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  இப்பட்டியலில் முதல் 20 நபர்களில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

  இந்தியாவை ஆளும் அரசியல் கட்சியின் தலைவரான 65 வயது சோனியா காந்தி உலகின் அதிகாரம் படைத்த தலைவர்கள் வரிசையில் 12வது இடத்தைப் பிடித்துள்ளார். உலகின் மிகப் பெரும் பொருளாதார நாடான இந்தியாவில் சோனியா காந்திக்கு அடுத்தபடியாக ராகுல் காந்தி உருவெடுத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  பட்டியலில் 20வது இடத்தில் பிரதமர் மன்மோகன் சிங் இடம்பெற்றுள்ளார். ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்ற மன்மோகன் சிங், இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாக ஃபோர்ப்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஆண்டு மன்மோகன் சிங் இப்பட்டியலில் 19வது இடத்திலிருந்தது குறிப்பிடத்தக்கது.

  இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, ஆர்சிலார் மிட்டல் நிறுவனத் தலைவர் லட்சுமி மிட்டல் ஆகியோரும் அதிகாரம் படைத்த நபர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். உலகின் 710 கோடி மக்களிடையே வலிமை மிக்க, அதிகாரம் படைத்த 71 நபர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பட்டியலிட்டுள்ளது.

  உலகின் இரண்டாவது அதிகாரம் படைத்த தலைவர்கள் பட்டியலில் 58 வயதான ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டு நான்காமிடத்திலிருந்த அவர் இப்போது இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய யூனியனின் முதுகெலும்பாக மெர்கல் திகழ்வதாக ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.

  மூன்றாமிடத்தில் ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், நான்காமிடத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோர் உள்ளனர். சீனாவின் புதிய அதிபர் ஜி ஜின்பிங் 9வது இடத்திலும், கூகுள் நிறுவனர் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் 20வது இடத்திலும் உள்ளனர். ஈரான் மதத் தலைவர் அலி கொமேனி 21வது இடத்திலும், அமெரிக்காவின் முன்னாள்அதிபர் பில் கிளிண்டன் 50வது இடத்திலும் உள்ளனர்.

  கடந்த ஆண்டு இப்பட்டியலில் 16வது இடத்தைப் பிடித்திருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இந்த ஆண்டு பட்டியிலில் இடம்பெறவில்லை. ஒபாமா அமைச்சரவையில் அவர் இம்முறை தொடர மாட்டார் என்பதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

  இதேபோல அமெரிக்காவின் நிதியமைச்சர் டிமோத்தி கெய்த்னரின் பெயரும் இந்த ஆண்டு பட்டியலில் இடம்பெறவில்லை. பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அஷ்பக் பர்வேஸ் கயானி இந்தப் பட்டியலில் 28வது இடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தலைவர் ஜகீர் உல் இஸ்லாம் இப்பட்டியலில் 58வது இடத்தில் உள்ளார்.

  மிக அதிக செலவில் சொந்த வீடு கட்டியுள்ள இந்தியப்பணக்காரர் முகேஷ் அம்பானிக்கு இப்பட்டியில் 37வது இடம் கிடைத்துள்ளது. லட்சுமி மிட்டல் 47வது இடத்தில் உள்ளார்.

  ஃபேஸ்புக் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுகெர்பெர்க் இப்பட்டியலில் 25வது இடத்தில்உள்ளார். 29 வயதில் ஃபோர்ப்ஸ் பட்டியலில் அவர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  பிரேஸில் அதிபர் தில்மா ரூùஸப் பட்டியலில் 18வது இடத்தில் உள்ளார். ஆப்பிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் 35வது இடத்தில் உள்ளார்.

  இப்பட்டியலில் லிங்ட் இன் இணை நிறுவனர் ரீய் ஹாப்மேன் 71வது இடத்தில் உள்ளார். புதிதாக இடம்பெற்றவரும் இவரே. இதேபோல 66வது இடத்தைப் பிடித்த தொழில்முனைவோர் இலோன் மஸ்க், முதல் முறையாக இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இவரது நிறுவனம் ஸ்பேஸ்எக்ஸ் முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai