Enable Javscript for better performance
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக ஜீ ஜின்பிங் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக ஜீ ஜின்பிங் நியமனம்

    By dn  |   Published on : 16th November 2012 04:36 AM  |   அ+அ அ-   |    |  

    bing

    சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) பொதுச்செயலராக அந்நாட்டின் துணை அதிபர் ஜீ ஜின்பிங் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார்.

    சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலரே நாட்டின் அதிபராகப் பதவி வகிப்பார். இதுவரை பொதுச்செயலராக நீடித்து வந்த ஹு ஜிண்டாவ் இப்போது ஓய்வு பெற்றுள்ளார்.

    பொதுச் செயலர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும், அடுத்த மார்ச் மாதம் வரை சீன அதிபர் பதவியில் ஜிண்டாவ் நீடிப்பார்.

    மார்ச் மாதத்துக்குப் பிறகு, இப்போது பொதுச்செயலராக நியமிக்கப்பட்டுள்ள ஜின்பிங் அதிபராகப் பொறுப்பேற்பார்.

    சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட விதிகளின்படி, அக்கட்சியின் பொதுச் செயலர் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படுவார். பொதுச்செயலராக பதவி வகித்து வந்த ஜிண்டாவ் 10 ஆண்டுகாலத்தை பூர்த்தி செய்து விட்டதால் ஜின்பிங் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார்.

    முன்னதாக, கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது மத்தியக் குழு மாநாட்டில் சீனாவின் அடுத்த அதிபராக ஜின்பிங்கும், பிரதமராக லீ கேகியாங்கும் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    kattana sevai