தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ராணுவ கொள்கைகளில் மாற்றம் தேவை

நம்மை அச்சுறுத்தும் தீவிரவாதத்தை ஒடுக்க நாட்டின் ராணுவக் கொள்கைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் வலியுறுத்தியுள்ளார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 5:33 pm

தினமணி

நம்மை அச்சுறுத்தும் தீவிரவாதத்தை ஒடுக்க நாட்டின் ராணுவக் கொள்கைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பர்வேஸ் அஷ்ரப் வெள்ளிக்கிழமை பேசியதாவது: தீவிரவாதம் என்பது ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது. முகம் தெரிந்த எதிரிகளுடன் போரிடுவதை விட அடையாளம் தெரியாமல் மறைந்திருந்து தாக்கும்

எதிரிகளுடன் போரிடுவது கடுமையான சவால்.

அதனால் நம் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள், தங்களுடைய புலனாய்வுத் திறனை ராணுவத்தினர் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு மேம்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது. கடந்த காலத்தில் நடைபெற்றுள்ள தீவிரவாத செயல்களைக் கருத்தில் கொண்டு மிக எச்சரிக்கையாகவும் புதிய

வியூகத்தோடும் நாம் பணியாற்ற வேண்டும்.

அதற்காக நடைமுறையில் உள்ள ராணுவக் கொள்கைகளில் மாற்றம் செய்ய வேண்டும். அதற்கு மக்களின் ஒத்துழைப்பும் நிலையான அரசியல் தலைமையும் தேவை.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்துத் துறைகளும் சட்ட வரம்புக்கு உள்பட்டே செயல்பட வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடும் ராணுவத்துக்கு அரசு எப்போதும் துணையாக இருக்கும்.

அரசியல் நிலைப்புத்தன்மை, சீரான சமூக, பொருளாதார வளர்ச்சி, சட்டத்தின் ஆட்சி, உணவு உற்பத்தி மற்றும் பாதுகாப்பு, கல்வி, தொழில்நுட்ப முன்னேற்றம் போன்ற அம்சங்கள் ஒருங்கே அமையப்பெற்றால்தான் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும். அதுவே

எதிர்கால தலைமுறையினருக்கு வளமாக அமையும் என்றார் பர்வேஸ் அஷ்ரப்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.