சுடச்சுட

  

  இலங்கையில் காமன்வெல்த் மாநாடு: ராணி எலிசபெத் பங்கேற்க மாட்டார்

  By dn  |   Published on : 08th May 2013 01:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  elizabeth

  இலங்கையில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் பிரிட்டிஷ் ராணி இரண்டாவது எலிசபெத் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அவருக்குப் பதிலாக இளவரசர் சார்லûஸ அனுப்பி வைக்க இருக்கிறார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை செய்தி வெளியிட்டுள்ளது.

  1973-ம் ஆண்டுக்குப் பின் இப்போதுதான் முதல்முறையாக காமன்வெல்த் நாடுகள் மாநாடு எலிசபெத் ராணியின் பங்கேற்பு இல்லாமல் நடைபெறவுள்ளது.

  எலிசபெத் ராணி இந்த ஆண்டில் இன்னும் 400 நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியுள்ளது. வயதாகிவிட்டதால், அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இலங்கையில் மனித உரிமை மீறல், போர்க் குற்றங்கள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி அங்கு காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் ராணி எலிசபெத் இந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

  காமன்வெல்த் அமைப்பில் மொத்தம் 54 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை முன்பு பிரிட்டனின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தவையாகும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai