பாகிஸ்தான் தேர்தல்: நவாஸ்-இம்ரான் கட்சிகளிடையே கடும் போட்டி

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் நவாஸ் ஷெரீஃபின் கட்சிக்கும், இம்ரான் கானின் கட்சிக்கும் இடையில்தான் கடும் போட்டி நிலவுவதாக சமீபத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் நவாஸ் ஷெரீஃபின் கட்சிக்கும், இம்ரான் கானின் கட்சிக்கும் இடையில்தான் கடும் போட்டி நிலவுவதாக சமீபத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தானில் இம்மாதம் 11ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை அறிய அந்நாட்டின் ஹெரால்டு பத்திரிகை, மக்களிடையே கடந்த மார்ச் மாதம் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. இதில் பங்கேற்றவர்களில் 25 சதவீதம் பேர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான் கானின் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியை 24.8 சதவீதம் பேர் ஆதரித்துள்ளனர். இரு கட்சிகளுக்கும் இடையே ஆட்சியைப் பிடிக்க கடும் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது.

அதிபர் ஜர்தாரி தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு வாக்களிக்கப் போவதாக வெறும் 17.7 சதவீதம் பேர் மட்டுமே கூறியுள்ளனர். தவிர, தேர்தல் நடைமுறையில் பாகிஸ்தான் மக்களுக்கு இருக்கும் அவநம்பிக்கையும் இந்தக் கருத்துக் கணிப்பில் வெளிப்பட்டுள்ளது. இக்கணிப்பில் பங்கேற்ற 1,285 பேரில் சுமார் 65.6 சதவீதம் பேர் பாகிஸ்தானில் தேர்தல் என்பது நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடப்பதில்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com