தரைக்கு அடியில் ஈரான் அமைத்துள்ள யுரேனிய சுத்திகரிப்பு மையத்தை மூட அந்நாடு மறுப்புத் தெரிவித்துள்ளது.
இதனால், அந்நாட்டுக்கும், வல்லரசுகளுக்கும் இடையில் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஈரானின் ஃபோர்டோ நகரில் மலைப்பகுதிகளுக்கு அடியில் மிக ஆழத்தில் யுரேனிய சுத்திகரிப்பு மையம் ஒன்றை அந்நாடு அமைத்துள்ளது.
வான்வழித் தாக்குதல்கள் மூலம் அழிக்க முடியாத விதத்தில், மிகப் பாதுகாப்புடன் அந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அணு மின்சாரம் தயாரிக்க, யுரேனியத்தைச் செறிவூட்டம் செய்ய வேண்டும்.
எனினும், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் யுரேனியத்தை செறிவூட்டினால் அதனை அணு ஆயுதத் தயாரிப்புக்குப் பயன்படுத்த முடியும்.
எனவே, ஃபோர்டோ மையம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, அதனை மூட வேண்டும், அல்லது அங்கு யுரேனியம் செறிவூட்டுவதற்கு பதிலாக வேறு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
எனினும், தனது முக்கிய யுரேனிய செறிவூட்டு மையத்துக்கு இஸ்ரேலிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பு மிக்க ஃபோர்டோ மையத்தை மூட முடியாது என்று ஈரான் மறுத்துள்ளது.