"பிராந்தியப் போர் பற்றிய சர்ச்சை கற்பனையே': சீனா விளக்கம்

இந்தியாவை மனதில் வைத்தே பிராந்தியப் போர் குறித்து சீன அதிபர் கருத்து வெளியிட்டார் எனக் கூறப்படுவது வெறும் கற்பனையே என்று சீன வெளியுறவுத் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
Published on
Updated on
1 min read

இந்தியாவை மனதில் வைத்தே பிராந்தியப் போர் குறித்து சீன அதிபர் கருத்து வெளியிட்டார் எனக் கூறப்படுவது வெறும் கற்பனையே என்று சீன வெளியுறவுத் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

"சீன ராணுவத்தின் அனைத்துப் பிரிவுகளின் தலைமையும் தங்களது போர் தயார்நிலையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், நவீன தகவல் தொழில்நுட்ப யுகத்தில், பிராந்திய அளவிலான போரில் வெற்றி பெறும் திறனை அதிகரித்து கொள்ள வேண்டும்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியிடம் ராணுவத் தலைமையகம் பூரண விசுவாசத்தை வெளிப்படுத்த வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியிடம் உறுதியான நம்பிக்கை கொள்ள வேண்டும்' என அதிபர் ஜீ ஜின்பிங் ராணுவத்துக்கு அறிவுறுத்தியதாக திங்கள்கிழமை செய்தி வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அந்நாட்டு வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுங்யிங் பெய்ஜிங்கில் தெரிவித்தது:

இரு நாடுகளிடையே பல பிரச்னைகள் இருக்கக் கூடும். ஆனால் எல்லைக் கோடு பிரச்னை சீன-இந்திய உறவை பாதிப்பதற்கு அனுமதிக்க மாட்டோம். இப்போதைய விவகாரத்துக்குத் திறமையாகத் தீர்வு காண முடியும். என்னைப் பொருத்தவரையில், எல்லைப் பகுதி பிரச்னை முடிவுக்கு வந்து, அங்கு இப்போது அமைதி நிலவுகிறது.

இரு நாடுகளின் தலைவர்களும் எல்லைக் கோடு பிரச்னைக்குப் பேச்சு மூலம் தீர்வு காணப்படும் என்று ஒருமனதாகக் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவை மனதில் வைத்துதான் பிராந்தியப் போர் பற்றிய சீன அதிபர் குறிப்பிட்டார் என்பது வெறும் கற்பனையே என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com