வெள்ள நிவாரணப் பணிகளுக்காக இந்திய- பாகிஸ்தான் எல்லையைத் திறக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செப்டம்பர் 7 ஆம் தேதி காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலமும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியும் கடும் பாதிப்படைந்தன.
இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மிதியடி ஏற்றுமதியாளர்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் அரசு, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
அதில், "பாதிக்கப்பட்ட தங்கள் பகுதியில் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு அரசு அதிகாரிகளையும், நிவாரணப் பொருள்களையும் அனுப்ப ஏதுவாக எல்லையை இந்தியா திறக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஐ.நா. சபை தலையிட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.