சுடச்சுட

  

  ஃபெர்குஸன் சம்பவம்: கருப்பின இளைஞரை சுட்ட காவலர் ராஜிநாமா

  By dn  |   Published on : 01st December 2014 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அமெரிக்காவைக் கொந்தளிப்பில் ஆழ்த்திய கருப்பின இளைஞர் சுடப்பட்ட சம்பவத்தில் தொடர்புள்ள காவலர் டாரென் வில்ஸன் காவல் துறையிலிருந்து விலகினார்.

  மிஸூரி மாகாணம், செயின்ட் லூயிஸ் புறநகர்ப் பகுதியான ஃபெர்குஸனில், மைக்கேல் பிரெளன் (18) என்ற கருப்பின இளைஞர், டாரென் வில்ஸன் என்ற போலீஸ் அதிகாரியால் கடந்த ஆகஸ்ட் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  பிரெளன் தன்னைத் தாக்க முற்பட்டதால், தற்காப்பு கருதி, அவரை சுட்டதாக அந்த போலீஸ் அதிகாரி கூறினார். பிரெளன் கையில் ஆயுதமெதுவும் இருக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட பெருநடுவர் குழு (கிராண்ட் ஜூரி), காவலர் டாரென் வில்ஸன் மீது நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று கடந்த வாரம் தீர்ப்பளித்தது.

  இந்தத் தீர்ப்பைக் கேட்டு பொதுமக்கள் கொதிப்படைந்தனர். இதையடுத்து, செயின்ட் லூயிஸ் நகரில் தீ வைப்பு, சூறையாடல் போன்ற சம்பவங்கள் நடைபெற்றன. அமெரிக்கா முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

  இந்நிலையில், கருப்பின இளைஞர் பிரெளனை துப்பாக்கியால சுட்ட காவலர் டாரென் வில்ஸன், தனது வேலையை சனிக்கிழமை ராஜிநாமா செய்துவிட்டதாக அறிவித்துள்ளார்.

  அவரது ராஜிநாமா கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:

  நான் காவல் பணியில் தொடருவது, பொதுமக்களுக்கும் காவல் துறையினருக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அப்படியொரு நிலை ஏற்படுவதை என்னால் அனுமதிக்க இயலாது. எனவே, நான் காவலர் பணியைவிட்டு விலக முடிவு செய்துள்ளேன்.

  எனது விலகல், இந்த நகரில் உள்ளவர்களுக்கு ஆசுவாசத்தை அளிக்கும் என்று நம்புகிறேன் என்று அவர் தனது ராஜிநாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai