சுடச்சுட

  

  ஐ.எஸ்.ஸிடம் அணு ஆயுதம்? பிரிட்டன் ஊடகம் அதிர்ச்சித் தகவல்

  By DN  |   Published on : 02nd December 2014 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளிடம், அணு குண்டுகளைத் தயாரிக்க உதவும் கதிர் வீச்சுப் பொருள்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  இதுகுறித்து பிரிட்டன் ஊடகங்களில் வெளியான செய்தி:

  கடந்த ஆகஸ்ட் மாதம் இராக்கின் மொசூல் நகரை ஐ.எஸ். அமைப்பினர் கைப்பற்றியபோது, அந்த நகரிலுள்ள பல்கலைக்கழகத்திலிருந்து கதிர் வீச்சுப் பொருளை அவர்கள் கைப்பற்றியதாகத் தெரிகிறது.

  தங்களிடம் கதிர் வீச்சுப் பொருள் சிக்கியிருப்பதாகவும், அதனைக் கொண்டு அணுக் கதிர் குண்டுகளை (வழக்கமான வெடிமருந்துடன் அணுக் கதிர் வீச்சுப் பொருள்களைக் கலந்து உருவாக்கப்படும் குண்டு) உருவாக்கவிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் ஐ.எஸ்.ஸில் இணைந்துள்ள பிரிட்டன் வெடிகுண்டு நிபுணர் ஹமாயூன் தாரிக் கூறியுள்ளார்.

  தாங்கள் அணு ஆயுதம் ஒன்றைத் தயாரித்துள்ளதாக வலைதளங்களில் ஐ.எஸ். அமைப்பினர் கூறிக் கொள்கின்றனர்.

  ஐ.எஸ்.ஸிடம் அணுக் கதிர் குண்டுகள் இருந்தால், அவற்றை இராக், சிரியாவில்தான் அவர்கள் பயன்படுத்துவார்கள். மேற்கத்திய நாடுகளுக்கு எடுத்துச் சென்று வெடிக்கச் செய்ய வாய்ப்பில்லை. இவ்வாறு பிரிட்டன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai