சுடச்சுட

    

    பெல்ஜியம் நாட்டிலுள்ள அணு உலை ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தையடுத்து அதன் இயக்கம் நிறுத்தப்பட்டது.

    அந்த நாட்டில் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நான்காவது அணு உலை இது.

    ஹய் நகரையொட்டி அமைந்துள்ள அந்த மின் நிலையம், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த "ஜி.டி.எஃப். சூயஸ்' நிறுவனத்தின் பெல்ஜியம் நாட்டு துணை நிறுவனமான "எலக்ட்ராபெல்'லுக்குச் சொந்தமானதாகும்.

    அங்குள்ள திஹாங்க் 3 அணு உலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், மதியத்துக்குள் தீ கட்டுப்படுத்தப்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சதி வேலை காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்படவில்லை என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    அந்த நாட்டின் மற்றொரு அணு மின் நிலையத்தில் தொழில்நுட்பக் காரணங்களால் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு அணு உலையின் இயக்கம் நிறுத்தப்பட்டது.

    மேலும், ஆன்ட்வெர்ப், திஹாங்கிலுள்ள இரு அணு உலைகளில் வெடிப்புகள் கண்டறியப்பட்டதால், அவற்றின் இயக்கமும் நிறுத்தப்பட்டது.

    பெல்ஜியத்தின் மின் தேவையில் 55 சதவீதம், அணுசக்தியின் மூலம் பெறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai