சுடச்சுட

  

  ராஜபட்சவை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர் எதிர்க்கட்சிகளுடன் ஒப்பந்தம்

  By DN  |   Published on : 02nd December 2014 04:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இலங்கை அதிபர் தேர்தலில், ராஜபட்சவை எதிர்த்துப் போட்டியிடும் முக்கிய வேட்பாளரும், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சருமான மைத்ரிபால சிறீசேனா, எதிர்க்கட்சிகளுடன் திங்கள்கிழமை ஒப்பந்தம் செய்து கொண்டார்.

  இலங்கை அதிபர் பதவிக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில், அதிபர் ராஜபட்ச 3ஆவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

  அவரை எதிர்த்து, ராஜபட்ச அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவரும், ராஜபட்ச அரசில் 2ஆம் நிலை தலைவருமான ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சியின் பொதுச் செயலாளர் மைத்ரிபால சிறீசேனா போட்டியிடுகிறார். தேர்தலில், ராஜபட்சவை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக கடந்த 21ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை அவர் ராஜிநாமா செய்தார்.

  இந்நிலையில், கொழும்பில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், புத்த மத மூத்த துறவி மதுலுவாவே சோபிதா, முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சிறீசேனா ஒப்பந்தம் செய்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயகே குமாரதுங்காவும் கலந்து கொண்டார்.

  அந்த ஒப்பந்தத்தில், இலங்கையில் "சர்வாதிகாரம் வாய்ந்த' அதிபர் முறையிலான ஆட்சியை நீக்குவது, அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள 18ஆவது திருத்தத்தை செல்லாததாக்கி விட்டு, இலங்கையில் சிறந்த ஜனநாயக ஆட்சி ஏற்படுவதற்கு வழிவகை செய்வது, தேர்தல் முறையிலும், அரசமைப்பு ரீதியிலும் சீர்திருத்தம் மேற்கொள்வது போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai