சுடச்சுட

  
  Carter

  அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ஆஷ்டன் கார்டனை, அதிபர் ஒபாமா அடுத்த பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்க முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  தற்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் கடந்த வாரம் அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

  ஐ.எஸ். பயங்கரவாதிகளுடனான போர் விவகாரத்தில், சக் ஹேகல் மீது ஒபாமா அதிருப்தியடைந்ததாலேயே அவர் பதவி விலகியதாகக் கூறப்பட்டது.

  இந்நிலையில், சக் ஹேகலுக்குப் பதிலாக நியமிக்கப்படவிருப்பவர் யார் என்பதை இதுவரை ஒபாமா அறிவிக்கவில்லை.

  எனினும், தற்போதைய இணை அமைச்சர் ஆஷ்டன் கார்டன்தான் அடுத்த பாதுகாப்புத் துறை அமைச்சர் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  60 வயதாகும் ஆஷ்டன் கார்டன், உயர் ரக ஆயுதங்களிலும், ராணுவச் செலவுகளைத் திட்டமிடுவதிலும் கைதேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.

  எனினும், போர்த் தந்திரங்களைக் கையாளும் அனுபவமோ, முந்தைய பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகலைப் போல ராணுவத்தில் பணியாற்றிய அனுபவமோ அவருக்கு இல்லை என துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai