சுடச்சுட

  

  எகிப்தில் காவல் நிலையத் தாக்குதல்: 188 பேருக்கு மரண தண்டனை

  By dn  |   Published on : 04th December 2014 02:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  எகிப்தில், காவல் நிலையம் ஒன்றைத் தாக்கிய முன்னாள் அதிபர் முகமது மோர்ஸியின் ஆதரவாளர்கள் 188 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

  முகமது மோர்ஸி பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது தலைமையிலான இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பினர், கெய்ரோ, கிஸா ஆகிய நகரங்களில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  அப்போது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில், நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.

  இந்தச் சம்பவம் நடைபெற்ற அதே நாள், கேர்தாஸா நகர காவல் நிலையத்தில் மோர்ஸியின் ஆதரவாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.

  இந்தத் தாக்குதல் தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 188 பேருக்கு செவ்வாய்க்கிழமை மரண தண்டனை விதிக்கப்பட்டது. எகிப்து நாட்டின் சட்டப்படி, அந்தத் தீர்ப்பு அந்த நாட்டு தலைமை மதகுருவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  வரும் ஜனவரி 24-ஆம் தேதிக்குள் இந்த மரண தண்டனை உறுதி செய்யப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai