சுடச்சுட

  

  ஆஸ்திரேலியாவில் குடியேற்றம்: முதலிடத்தில் இந்தியர்கள்

  By dn  |   Published on : 07th December 2014 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறியவர்களின் பட்டியலில், இந்தியர்கள் முதலிடத்தில் இருப்பதாக அண்மையில் வெளியான அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

  இதுகுறித்து அந்த நாட்டின் "பொருளாதார ஒத்துழைப்பு, மேம்பாட்டு அமைப்பு' வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

  கடந்த 2012 முதல் 2013-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கை 46.6 சதவீதம் அதிகரித்தது.

  அந்த காலகட்டத்தில் 1,23,400 பேர் குடியுரிமைக்காக விண்ணப்பத்திருந்தனர். வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறிவர்களின் எண்ணிக்கையும் அந்த காலகட்டத்தில் கணிசமான அளவு அதிகரித்தது.

  அவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கைதான் மிக அதிகம். அப்போது 40,100 இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்காக விண்ணப்பித்தனர். அவர்களுக்கு அடுத்தபடியாக 27,300 சீனர்களும், 21,700 பிரிட்டிஷாரும் குடியேற்றத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தனர்.

  விசா அனுமதி காலம் முடிந்துபோன 62,700 பேர் ஆஸ்திரேலியாவில் சட்ட விரோதமாகத் தங்கியுள்ளனர் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai