சுடச்சுட

  

  காஷ்மீரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

  இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

  காஷ்மீரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில், ராணுவ வீரர்கள், போலீஸார், அப்பாவிப் பொதுமக்கள் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

  இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. மேலும், தீவிரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதனை முறியடிக்கும் பணியில், இந்தியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து இணைந்து செயலாற்றும் என்று அவர் தெரிவித்தார்.

  முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ஃப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  காஷ்மீர் குறித்த அமெரிக்காவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களுக்கு இடையேயான அமைதிப் பேச்சு வார்த்தையின் மூலம் காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண, தற்போதும் வாய்ப்புள்ளதாகவே அமெரிக்கா நம்புகிறது. காஷ்மீரில் நிகழும் வன்முறைச் சம்பவங்கள் குறித்த தனது கவலையை, இரு நாடுகளிலும் உள்ள தூதரங்கள் மூலம் அமெரிக்கா தெரிவித்து வருகிறது. இந்தப் பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில், இந்தியாவும், பாகிஸ்தானும் தொடர்ந்து இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது என்று ஹார்ஃப் தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai