சுடச்சுட

  

  முறைகேடு புகார்: சீன பாதுகாப்புத் துறை முன்னாள் தலைவர் கைது

  By dn  |   Published on : 07th December 2014 02:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சீனாவில் ஊழல், நாட்டின் ரகசியங்களைக் கசியச் செய்தது உள்ளிட்ட புகார்களின் கீழ், பாதுகாப்புத் துறையின் முன்னாள் தலைவர் ஜெü யாங்காங், கைது செய்யப்பட்டார்.

  சீனாவில் முந்தைய அதிபர் ஹியூ ஜிண்டோ ஆட்சிக் காலத்தில் அதிகாரமிக்க தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் யாங்காங். 72 வயதான இவர், 2012ஆம் ஆண்டு வரை உள்நாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரியாக பதவி வகித்தார்.

  கைது செய்யப்பட்ட அவர், சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமான "ஜின்ஹுவா' தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

  யாங்காக் தனது பதவிக்காலத்தில், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தார்.

  இதுபோன்று பலருக்கும் உதவி செய்த யாங்காங், அவர்களிடம் இருந்து லஞ்சம் வாங்கினார்.

  இதுதவிர, பல பெண்களுடன் அவர் தகாத உறவு வைத்திருந்தார்; நாட்டின் ரகசியங்களையும், கட்சியின் ரகசியங்களையும் கசியச் செய்தார்.

  இதனால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai