சுடச்சுட

  
  modi

  அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பிரபல "டைம்' வார இதழ் சார்பாக இந்த ஆண்டின் சிறந்த மனிதராக பிரதமர் நரேந்திர மோடி தேர்வாக வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

  இதுதொடர்பாக, ஆன்லைன் முறையில் வாக்களிக்கும் கால அவகாசம் சனிக்கிழமை நள்ளிரவு முடிந்தது. இந்நிலையில், மோடி 16.2 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

  அவருக்கு அடுத்தபடியாக, ஃபெர்குஸனில் கருப்பின இளைஞர் காவலரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் உள்ளனர். இவர்கள் பெற்ற வாக்குகளின் அளவு 9.2 சதவீதமாக உள்ளது.

  ஆன்லைன் முறையில் வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் "ஆண்டின் சிறந்த மனிதர்' பற்றிய முடிவுகள் திங்கள்கிழமை (டிச.8) வெளியாகவுள்ளது. இது தவிர, "டைம்' பத்திரிகையின் ஆசிரியர் குழு சார்பில், ஆண்டின் சிறந்த மனிதராகத் தேர்ந்தெடுக்கப்படுபவரின் விவரம் தனியாக வெளியாகும்.

  ஓர் ஆண்டு காலத்தில், உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் மனிதரை "ஆண்டின் சிறந்த மனிதராக' "டைம்' பத்திரிகை தேர்ந்தெடுத்து அறிவித்து வருகிறது. 1927-ஆம் ஆண்டு முதல் இவ்வாறு அறிவிக்கப்பட்டு வருகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai