சுடச்சுட

  

  ஆளில்லா விமானத்தின் மீது பயணிகள் விமானம் மோதல் தவிர்ப்பு: லண்டன் ஹீத்ரூவில் சம்பவம்

  By dn  |   Published on : 08th December 2014 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உலகின் மிகப் பெரிய விமான நிலையங்களில் ஒன்றான லண்டன் ஹீத்ரூ விமான நிலையப் பகுதியில் பறந்த ஆளில்லா விமானமொன்று பயணிகள் விமானத்தின் மீது மோதுவது தவிர்க்கப்பட்டது.

  இதுகுறித்து, பிரிட்டன் விமான நிலைய வாரியம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

  கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்த விவரம்: ஹீத்ரூ விமான நிலையத்தில் ஏர்பஸ் 320 விமானமொன்று 700 அடி உயரத்தில் பறக்கும்போது, அதன் பைலட், அப்பகுதியில் ஆளில்லா விமானம் பறப்பதைக் கண்டார். இது குறித்து அவர் உடனடியாக, கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்தார்.

  ஆளில்லா விமானம், அப்பகுதிக்குள் நுழைந்ததை விமான நிலையத்தின் ரேடார் கருவி கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது. அதன் பின்னர் அந்த ஆளில்லா விமானம் சுவடின்றி மறைந்துவிட்டது.

  இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன் அறிக்கை வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது.

  பயணிகள் விமானங்களுக்கு ஆளில்லா விமானங்களால் ஏற்படக் கூடிய ஆபத்துகள் குறித்து ஏற்கெனவே பல தரப்பிலிருந்தும் கவலை தெரிவிக்கப்பட்டு வருகிறது.

  இந்நிலையில், ஆளில்லா விமானங்களை கிறிஸ்துமஸ் பரிசாக அளிப்பது புதிய வழக்கமாகி வருகிறது.

  35 பவுண்டு (சுமார் ரூ. 3,500) முதல் 3,350 பவுண்டு (சுமார் ரூ. 3.2 லட்சம்) வரை விலையுள்ள ஆளில்லா விமானங்கள் பிரிட்டனில் அமோக விற்பனையைக் கண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai