சுடச்சுட

  

  அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் ஒரு நாள் பயணமாக இராக் வந்தார்.

  சக் ஹேகல் சமீபத்தில் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். பதவியிலிருந்து விலகும் முன், பயங்கரவாத்துக்கு எதிராக அமெரிக்க ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ள சில முக்கியப் பகுதிகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

  முன்னதாக ஆப்கானிஸ்தான் சென்ற அவர், செவ்வாய்க்கிழமை இராக் வந்தடைந்தார். பலத்த பாதுகாப்புக்கிடையே, பாக்தாத் விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

  இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதியை அவர் சந்தித்துப் பேசுவார்.

  மேலும், அரசின் முக்கியத் தலைவர்கள், அதிகாரிகளை அவர் சந்தித்துப் பேசவிருக்கிறார்.

  பின்னர், அந்நாட்டில் உள்ள அமெரிக்கப் படைத் தளபதிகளை சந்தித்துப் பேசுவார்.

  இராக்கில் தற்போது சுமார் 1,650 அமெரிக்கப் படை வீரர்கள் உள்ளனர். அதிகபட்சமாக இராக்கில் 1.7 லட்சம் வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

  2011-ஆம் ஆண்டு டிசம்பரில், பெரும்பான்மையான அமெரிக்கப் படையினரின் வெளியேற்றத்தையொட்டி, அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் லியோன் பனெட்டா இராக் பயணம் மேற்கொண்டார். அதன் பிறகு, இப்போதுதான் அத்துறை அமைச்சர் இராக் வந்துள்ளார்.

  அமெரிக்கப் படையினரின் வெளியேற்றத்துக்குப் பிறகு, இஸ்லாமிய தேசம் பயங்கரவாத அமைப்பு (ஐ.எஸ்.) இராக்கின் கணிசமான பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.

  ஐ.எஸ். தாக்குதல்களைத் தொடர்ந்து, இராக் ராணுவம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்கா தலைமையில் பல நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த பாதுகாப்புப் பயிற்சியாளர்கள் இராக் ராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai