சுடச்சுட

  
  Southwest

  அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலிருந்து ஃபீனிக்ஸ் நகரம் நோக்கி செவ்வாய்க்கிழமை புறப்பட்ட விமானம் ஒன்று, விமானத்தில் ஏறிய பயணிகளைவிட கூடுதலாக ஒரு பயணியுடன் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

  "சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ்' நிறுவனத்தின் அந்த விமானத்திலிருந்த பயணி ஒருவருக்கு நடு வானில் பிரசவம் நிகழ்ந்ததையடுத்து, மருத்துவ உதவிக்காக அந்த நகருக்கு விமானம் திருப்பி விடப்பட்டது. விமானத்தில் பயணம் செய்த மருத்துவர் ஒருவரும், செவிலியர் ஒருவரும் விமானப் பணியாளர்களின் உதவியுடன் அந்தப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்ததாக சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

  லாஸ் ஏஞ்சலீஸில் விமானம் தரையிறங்கியவுடன், அதில் ஏறிய மருத்துவப் பணியாளர்கள் அந்தப் பெண்ணையும், பிறந்த குழந்தையையும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

  மேலும், அந்த விமானத்தை சுத்தம் செய்வதற்காக, அதிலிருந்த பயணிகள் அனைவரும் மாற்று விமானத்தில் ஃபீனிக்ஸ் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இரண்டு மணி நேரத்துக்கு மேல் பயணம் தாமதப்பட்டாலும், தாயும் சேயும் நலமாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai